Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சாவூரில் விழுந்த ஜாக்பாட்.. முதலை பண்ணை தஞ்சையில் வருது.. அரசு குட்நியூஸ்.. அப்ப சிதம்பரத்துக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 3 முதலை பண்ணைகள் உள்ளன.. எனினும் புயல், வெள்ளநீர் அதிகரித்துவிட்டாலோ அல்லது வறட்சி ஏற்பட்டுவிட்டாலோ, சில முதலைகள் ஊருக்குள் நுழைந்துவிடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்படுமா? என்று எம்எல்ஏ கேஏ பாண்டியன் இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்து பேசியிருக்கிறார்.

சென்னையில் இருக்கும் முதலைகள் பண்ணை தான் ஆசியாவிலேயே முதல்முறையாக முதலைகளுக்கு என்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காப்பிடம். 3 மூன்று வகை முதலைகளோடு தொடங்கிய இந்தப் பூங்காவில் உலகளவில் இருக்கும் 23 வகையான முதலைகளில் 17 முதலைகள் தற்போது பராமரிக்கப்படுகின்றன.

Thanjavur crocodile farm Tanjore

முதலைகள் இனப்பெருக்கம்

ஒவ்வொரு வகை முதலைகளுக்கும் தனித்தனி வாழிடம், இனப்பெருக்க காலத்தில் அவற்றைத் தனியாக பராமரிப்பது, இயற்கையானச் சூழல் என்று அசத்துகிறது சென்னை முதலைகள் பண்ணை. சுமார் 5000 முதலைகள் வரை இனப்பெருக்கம் செய்ய உதவிகரமாக அமைந்த அங்கு 2000-க்கும் அதிகமான ஊர்வனப் பிராணிகள் வாழ்ந்து வருகின்றன.

அதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் முதலை பண்ணையானது, 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஆசியாவில் அழிந்துவரும் இனமாக கருதப்படும் சதுப்பு நில முதலை இனத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த பண்ணை தொடங்கப்பட்டு, கடந்த 50 வருடங்களாக வனத்துறையால் பராமரிக்கப்பட்டும் வருகிறது.

திருப்பூர் முதலை பண்ணை

மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் சேகரிக்கும் பொருட்கள், உற்பத்தி செய்யும் கைவினைப்பொருட்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை மையமும் இந்த திருப்பூர் முதலை பண்ணை அருகே அமைந்துள்ளது... அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கும் மக்களுக்கும், முதலை குறித்த அரிய தகவல்களின் பொக்கிஷமாக இருப்பதால், மாநில சுற்றுலா பட்டியலில் அமராவதி முதலைப்பண்ணை முக்கிய இடத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மற்றொரு முதலை பண்ணை அமைப்பதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவ கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலைகளை ஏற்படுத்த வனத்துறை அனுமதி வேண்டும் என்று சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், கோரிக்கை வைத்தார்.

சபாஷ் அறிவிப்பு

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, வனத்துறைக்கு சொந்தமான பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 500 ஹெக்டேருக்கு 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய சாலைகள் அமைப்பது மற்றும் பழைய சாலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, வனத்துறை நிலங்களில் புதிய சாலை அமைப்பது குறித்து மனு அளித்தால் பரிசீலனை செய்து புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்றார்.

தஞ்சாவூருக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

அதேபோல, சட்டமன்ற உறுப்பினர் சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலை பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் 3 இடங்களில் முதலை பண்ணைகள் உள்ளன.. கோடை காலத்தில் ஆழமான பகுதிகளில் சென்று தங்கி விடுகிறது. அணைக்கரை பகுதிகளில் முதலை பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. முதலையால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது..

விரைவில் தஞ்சாவூர் பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்பட உள்ளது. அதற்கு அருகில் தான் சிதம்பரம் பகுதி உள்ளதால் முதலை பண்ணை அமைக்க வாய்ப்பில்லை" என்று பதிலளித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பானது, தஞ்சை மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. காரணம், அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.. இவைகள் உண்ண உணவின்றி அழிவின் விளிம்பில் தவிப்பதாக கூறப்படுகிறது.

முதலைகள் பாதுகாப்பு

பொதுவாக, காவிரியில் நீர்வரத்து இல்லாதபோதும், போதுமான மழையின்றி பொய்த்து போகும் சமயத்திலும், கொள்ளிடம் ஆற்றிலும் முதலைகள் வறண்டு கிடக்கின்றன. அணைக்கட்டில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல இடங்களில் வறட்சியால் நீரின் அளவு குறைந்துவிட்டால், அங்குள்ள முதலைகள் ஊருக்குள் நுழையும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

எனவே, முதலைக்கு என்று தனி இடம் தேர்வு செய்து முதலைப் பண்ணை அமைத்து பராமரித்தால் சுற்றுலாத் தலமாக மாறும், இதனால் அரசுக்கு வருவாயும் பெருகும் என்றும் ஏற்கனவே பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், தஞ்சாவூரில் முதலை பண்ணை ஏற்படுத்துவதாக அறிவிப்பு இன்று வெளியாகியிருப்பது வரவேற்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+