சரோஜாதேவி.. படக்னு இப்படி போவாங்களாம்.. நடிகை சாவித்திரி அப்படி போவாங்களாம்.. காலத்தின் "விசித்திரம்"
சென்னை: காலம் எவ்வளவு விசித்திரங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.. எதையும் புரட்டிப்போடும் வலிமை காலத்துக்கு மட்டுமே உண்டு என்பதையும் மறுக்க முடியாது.
நடிகையர் திலகம் சாவித்திரியும், அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும் ஒன்றாக சேர்த்து நடித்த படம் "பார்த்தால் பசிதீரும்".. பொதுவாக 2 நடிகைகள் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கும்போது அவர்களுக்குள் எந்த அளவுக்கு நட்பு இருக்கும் என்பதை கணிக்கவே முடியாது. ஆனால், இருவருக்குள்ளும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உறவு அவ்வளவு சீராக இருந்ததில்லையாம்.

இவர்களுக்குள் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்து, சமீபத்தில் மூத்த பத்திரிகையாளரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்திருந்தார்..
"பார்த்தால் பசி தீரும்" படத்தில், இருவருமே சேர்ந்து நடித்திருந்தார்கள்..அவரவர் வசனங்களை பேசிவிட்டு, சாவித்திரி ஒருபக்கம் போய் உட்கார்ந்து கொள்வாராம்.. சரோஜாதேவி ஒருபக்கம் போய்விடுவாராம்.. நெருக்கமாக 2 பேருமே பேசிக்கொள்ளவே மாட்டார்களாம்.
கொண்டாட்டம்: "பெற்றால்தான் பிள்ளையா" என்ற படத்தின் 100 நாள் விழா கொண்டாட்டம் நடந்தபோது, அறிஞர் அண்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்குவதாக இருந்தது.. அந்த நேரத்தில்தான், அந்தப் படத்தில் நடித்த சரோஜாதேவிக்கு புதிதாக திருமணம் ஆகியிருந்தது. அதனால் அந்த விழாவிற்கு அவரால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே, படத்தின் கதாசிரியரான ஆருர்தாஸ் சாவித்ரியிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி, 'இது அண்ணா கலந்து கொள்ளும் விழா.. விழாவில் சம்பந்தப்பட்ட ஹீரோயின் வராமல் இருந்தால் நன்றாக இருக்காது.. அதனால் சரோஜாதேவிக்கு வழங்கப்படும் விருதை, அவருக்கு பதிலாக நீதான் வாங்கிக்கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தாராம். அதற்கு சாவித்ரி, "அதெப்படி, அவங்க நடிச்சத்துக்கு நான் எப்படி வந்து வாங்குவது, அவங்களையே வாங்க சொல்ல வேண்டியதுதானே" என்றாராம்,
சாவித்திரி: எனினும், ஆருர்தாஸ் மீது சாவித்ரிக்கு நல்ல மதிப்பும், நட்பும் இருந்த காரணத்தால், அவர் பேச்சை அதற்கு மேல் மீற முடியாமல், அந்த விருதை மேடையேறி வாங்கி கொண்டாராம். ஆனால், அந்த விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும், சாவித்ரி உள்ளே நுழைந்தபோது ஆச்சரியமாக பார்த்தார்களாம்.. "பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் இவர் நடிக்கவில்லையே? இவர் ஏன் இங்கு வருகிறார்? என்று குழம்பியிருந்தார்களாம்.. அதற்கு பிறகுதான் விஷயம் தெரிந்துள்ளது.

ஆனால், அந்த காலத்தில், நடிகைகளுக்குள் ஈகோ இருந்தாலும்கூட, ஒருவித ஆரோக்கியமான போட்டியும் இருந்திருக்கிறது.. அத்துடன் ஒருவரையொருவர் தரக்குறைவாக விமர்சித்துக் கொள்ளாமலும், தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி சாடிக்கொள்ளாமலும், நாகரீக போக்கை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்..
உடல்நிலை: இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டியுள்ளது.. சாவித்திரி கடைசி காலத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூர் ரோட்டில் விழுந்தபோது, அவரை காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்ததுடன், சென்னையில் ஜெமினி கணேசனுக்கு போன் செய்து தகவலை சொன்னதும் சரோஜாதேவிதான் என்பதை மறுக்க முடியாது..
சாவித்திரிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தபோதும், கடைசி நாட்களில் படப்பிடிப்புக்கு தன்னுடைய மகனுடன் செல்ல திட்டமிட்டார். படப்பிடிப்பு பெங்களூருவில், அங்கு சாளுக்கிய ஓட்டலில் தங்கினார். காலை உணவை சாப்பிட மறந்து விட்டதால், மயங்கி விழுந்திருக்கிறார்.. அப்போது, அந்த ஓட்டல் நிர்வாகம், நடிகை சரோஜாதேவியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறது.
உதவிகள்: அந்த சமயம் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவை தொடர்பு கொண்ட சரோஜாதேவி, சாவித்திரிக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.. சரோஜாதேவி எடுத்துக்கொண்ட முயற்சியால், சாவித்திரி தனி விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டு, சிகிச்சையும் ஆரம்பமானது.
விசித்திரம்: 1959-ம் ஆண்டில் "கைராசி" ஷூட்டிங்கில் சரோஜாதேவியோடு முரண்பட்டு சண்டைக்குப்போன சாவித்திரிக்கு, கடைசியாக உதவி செய்தவரே சரோஜாதேவிதான்.. வரலாறுதான் எவ்வளவு விசித்திரமானது.. அனைத்தையுமே புரட்டி போடும் சக்தி, காலத்துக்கு மட்டுமே உண்டு!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications