ஆ "அவரா".. கடைசிவரை நம்புனாரே.. தாமரையில் மங்குகிறதா "உதயசூரியன்".. ஒரே வார்த்தையில் தகர்கிறதா "உறவு"?
ஐஜேகே பாரிவேந்தர் பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என தெரியவில்லை
சென்னை: செய்தியாளர்களை இழிவுபடுத்தியும், மட்டுப்படுத்தியும் பேசுவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிது இல்லை என்றாலும், நேற்றைய தினம் அவரது பேட்டியானது, சொந்த கூட்டணியையே அசைத்து பார்ப்பதாக அமைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. என்ன நடந்தது?
இந்திய ஜனநாயக கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் தலைவர் பாரிவேந்தர். தான் சார்ந்த உடையார் சமுதாயத்தினரை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அந்த முயற்சி பெருமளவு அவருக்கு கை கொடுக்கவில்லை..
பிறகு, பாஜக, திமுக என்ற மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் களத்தில் போட்டியிட்டார்.. 2019-ல் பெரம்பலூர் எம்பி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று, இப்போது எம்பியாக இருக்கிறார்.

நொந்து நூடுல்ஸ்
எம்பியான பிறகு, ஆக்டிவ்வாக இவர் இல்லை என்றும், உடல்நலம் சார்ந்த விஷயங்கள் காரணமாக தொகுதி பக்கம் அவ்வளவாக போக முடியவில்லை என்றும் ஒருசில வருடங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இதனிடையே செய்தியாளர்களிடம் ஒருமுறை பாரிவேந்தர் நொந்துபோய் பேசியிருந்தார்.. "அரசியலுக்கு ஏன் வந்தேன் என்று நினைத்து வருத்தப்படுகிறேன்.. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிப்பது நிற்கவில்லை.. திராவிட கட்சிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நான் கட்சியை தொடங்கினேன்.. ஆனால், குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் கூடாது.. பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் குடும்ப அரசியல் ஒழிக்கப்படும்" என்றார்.

உதயசூரியன்
உதயசூரியன் சின்னத்தில் எம்பியாக இருந்துகொண்டே பாரிவேந்தர் இப்படி பேசியபோது, ஒருவேளை வரும் தேர்தலில் கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைப்பார் என்றே எதிர்பார்ப்புகள் கிளம்பின.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த மாதம் திடீரென, எடப்பாடி பழனிசாமியை ரவி பச்சமுத்து சென்று சந்தித்து பேசினார்.. எடப்பாடியே இப்போது பாஜக கூட்டணியுடன் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாமல் தமிழகமே குழம்பி போயுள்ள நிலையில், ரவி பச்சமுத்து, எடப்பாடியை சந்தித்து பேசியது, மேலும் பல யூகங்களை கிளப்பியது.

ரவி பச்சமுத்து
இப்படிப்பட்ட சூழலில்தான், பாரிவேந்தருக்கு பாஜக வலைவீசியதாகவும, 2024 தேர்தல் கூட்டணியையும் பேசி முடித்ததுடன், பெரம்பலூர் தொகுதியையே பாரிவேந்தருக்கு மறுபடியும் பெற்று தருவதாக பாஜக உறுதி தந்திருப்பதாகவும் தகவல்கள் பரபரத்தன.. ஆனால், தேர்தலில் போட்டியிடுமளவுக்கு தனக்கு உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால், தனக்கு பதிலாக மகன் ரவி பச்சமுத்துவை நிறுத்த பாரிவேந்தர் முடிவெடுத்திருப்பதாகவும, இதனால், அப்பாவின் பெரம்பலூர் தொகுதிக்குள் ரவி பச்சமுத்து அடிக்கடி தென்பட துவங்கி உள்ளதாகவும் கூடுதல் செய்திகள் கசிந்தன.

பாரிவேந்தர்
திமுக கூட்டணியை விட்டுவிட்டு, பாஜகவுக்கு பாரிவேந்தர் கூட்டணி வைக்க ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. அதனால்தான் தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு.. இந்த முடிவு கடந்த வருடமே எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.. அதனால்தான், உள்ளாட்சித் தேர்தலிலேயே இந்திய ஜனநாயக கட்சி, திமுகவின் தயவில்லாமல் தனித்துப் போட்டியிட்டதாக கூறப்படுகிறது..

ப்ரூப் இருக்கே
ஐஜேகவுக்கு சீட் தருவதாக பாஜக உறுதி தந்தது ஒருபக்கம் இருந்தாலும், பாஜகவுக்கே அதிமுக சீட் தரப்போகிறார்களா? எவ்வளவு சீட் தரப்போகிறார்கள்? என்ற சந்தேகம் நிலவி கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், பாஜகவுடன் பாரிவேந்தர் கூட்டணிக்கே செக் வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.. நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் கொந்தளித்து பேசியிருந்தார் அண்ணாமலை.. "நீங்கள் எந்த சேனல்" என்று புதிய தலைமுறை செய்தியாளரை கேட்ட அண்ணாமலை, திமுக அமைச்சர் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டு உள்ளது. வீடியோ ஆதாரத்துடன் உள்ளது, நான் அதை தருகிறேன், நீங்கள் அதை டெலிகாஸ்ட் செய்வீர்களா? என்று கேட்டார் அண்ணாமலை.

டெலிகாஸ்ட்
இதனால் எரிச்சலடைந்த புதியதலைமுறை டிவி செய்தியாளர், "ஒவ்வொருமுறையும் நீங்கள் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் ஆனால் ஆதாரத்தை தர மறுப்பது ஏன் என்று கேட்டார். இந்த கேள்வியால், கொந்தளித்துப்போன அண்ணாமலை, பிஜிஆர் எனர்ஜி குறித்த ஆதாரம் உள்ளது அதை ஒளிபரப்புவீர்களா என்று மறுபடியும் புதிய தலைமுறை செய்தியாளரிடம் கேட்டார்... நான் கொடுக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் அரைமணி நேரம் உங்கள் சேனலில் ஒளிபரப்ப வேண்டும், அரை மணி நேரம் ஒளிபரப்பு செய்துவிட்டு, அதற்கு பிறகு என்கிட்ட வந்து கேள்வியை கேட்க வேண்டும்.

ஜால்ரா ஜால்ரா
நான் கொடுக்கும் ஆதாரங்களை போடாமல், அந்த கட்சிக்கு ஜால்ரா அடித்து விட்டு இங்கே வந்து கேட்கக்கூடாது... நான் பிஜிஆர் ஆதாரத்தை பிரஸ்மீட்டில் கொடுத்தும் அதை நீங்கள் ஒளிபரப்பு செய்யவில்லை. சும்மா வந்து கேள்வி கேட்டு கதை விடக்கூடாது. நான் கொடுக்கும் ஆதாரத்தை போடாமல் முதலமைச்சர் டீ குடித்தார், காபி குடித்தார், சைக்கிளில் போகிறார் என்று தானே நியூஸ் போடறீங்க? நீங்க வாங்க நான் ஆதாரம் தருகிறேன், ஆனால், அதை டெலிகாஸ்ட் செய்ய வேண்டும். முதல்ல பிஜிஆர் எனர்ஜி பற்றிய ஆதாரம் தருகிறேன், அப்பறம் ஒவ்வொன்னாக தருகிறேன் என்று புதிய தலைமுறை டிவி மீது சீறியிருந்தார் அண்ணாமலை...

கழடும் சக்கரம்
விரைவில், பாஜகவுடன் கூட்டணிக்கு பாரிவேந்தர் தயாராகிவரும்நிலையில், அதுவும் அவர்கள் கேட்ட தொகுதியையே ஒதுக்கி தருவதாக பாஜக மேலிடம் உறுதி தந்துள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், அவர்களின் சொந்த டிவி நிருபரை வைத்தே பஞ்சாயத்தை கூட்டி உள்ளதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இதெல்லாம் யதேச்சையாக நடந்ததா? அல்லது பாரிவேந்தரை கூட்டணியில் சேர்க்காமல் கழட்டிவிடுவதற்காக இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினாரா அண்ணாமலை? என்ற குழப்பங்களும் கிளம்பி உள்ளன.

மங்கும் உதயசூரியன்?
சமீபத்தில் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்திருந்தார்.. "இந்திய மக்களுக்கே பெரிய இழப்பாகும்" என்றும் பாரிவேந்தர் பதிவிட்டிருந்தார்.. மேலிட பாஜக மீது நன்மதிப்பை பேணி வந்தாலும்கூட, ஐஜேகே கூட்டணி குறித்து தமிழக பாஜக என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள்.. எடப்பாடிமீதும், பாரிவேந்தர் தரப்பு நல்லுறவை வைத்துள்ளதால், அவருடனான கூட்டணி சோடை போக வாய்ப்பிருக்காது என்றாலும், பாஜகவுடனான கூட்டணி இப்போதைக்கு "டவுட்" என்கிறார்கள்.. ஆனால், திமுக கூட்டணியில் இருந்து பாரிவேந்தர் வெளியேறி விட்டாலும், மக்களவை உள்ளிட்ட முக்கியமான இடங்களில் எல்லாம் இன்னமும், திமுக எம்பியாகவே தன்னை அடையாளப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications