"மாஸ்" ப்ளான்.. சொன்னதை செய்த ஸ்டாலின்.. மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தார்
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று, மதுரையில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக, சிற்றுண்டி எடுத்து செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், காலை உணவை சுவைத்து ஆய்வு செய்தார்.
அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதைத் தொடர்ந்து, காலை 8 மணி அளவில் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இடைநிற்றல்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணைகளும் வெளியிடப்பட்டன.

நெல்பேட்டை
இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து, காலை 8 மணி அளவில் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் ஒன்றை ஏற்கனவே அனுப்பியிருந்தார்.

ஏர்போர்ட்
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்பு வரை) குழந்தைகளுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தினை 2022-2023ம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து, இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற பள்ளிகளில், நாளை முதல் திட்டம் அமலாகிறது.

மலைப்பகுதிகள்
இதற்காக, நேற்றைய தினமே சென்னையில் இருந்து கிளம்பி மதுரைக்கு வந்துவிட்டார் முதல்வர்.. இன்று காலை நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார் .. அப்போது, காலை உணவை சுவைத்து ஆய்வு செய்தார் முதல்வர்.. அத்துடன், உணவு எடுத்துச்செல்லும் வாகனங்களை கொடியசைத்தும் தொடங்கி வைத்தார்.. இதைத்தொடர்ந்து ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அங்குள்ள மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறியதுடன், அம்மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications