EXCLUSIVE: கண்டிப்பா இருக்கு.. 7ம் தேதி வரை மழை காத்திருக்கு.. ஹேப்பி நியூஸ் தந்தார் செல்வக்குமார்!
7ம் தேதி வரை நல்ல மழை இருப்பதாக செல்வகுமார் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "இருக்கு.. கண்டிப்பா இருக்கு.. 7-ம் தேதி வரை நல்ல மழை நமக்கு இருக்கு.. புதிய சிஸ்டம் இலங்கை கடல் மீது ஏற இருக்கிறது.. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரங்களில் இன்று பெய்யும் மழையானது, நாளை கூடும்.. நாளை பெய்யும் மழை, 30-ம் தேதி கூடியிருக்கும்.. 30-ம் தேதியும், 1-ம் தேதியும் தமிழகத்தில் பலத்த மழை காத்து கொண்டிருக்கிறது... எப்படியும் 7-ம் தேதி வரை மழை இருக்கிறது" என்று வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் செல்வகுமார் நமக்கு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.. அதிலும் சென்னை உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் இந்த மழை, தொடருமா, அல்லது எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுவிட்டு அப்படியே ஒருநாளோடு நின்றுவிடுமா என்று தெரியவில்லை.
அதனால் வரப்போகும் நாட்களில் மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் செல்வகுமாரிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக பேசினோம். அப்போது அவர் அளித்த குளுகுளு தகவல் தான் இவை:

தாழ்வு நிலை
"வங்கக் கடலில் தெற்கு பகுதியில் அதாவது நிலநடுக்கோட்டு இந்திய பகுதியில் மற்றும் தெற்கு வங்ககடல் பகுதியில் நிலைத்து நீடித்து கொண்டிருக்கக்கூடிய காற்று சுழற்சி, இது தாழ்வு நிலையாக மாறி இருக்கிறது. இது நாளை இலங்கையின் தென்கிழக்கு பகுதியிலும், நாளை மறுதினம் 30-ம் தேதி இலங்கை கரைமீதும் ஏறி அது மன்னார் வளைகுடா, குமரிகடல் வழியாக, அது அரபிக்கடல் நோக்கி பயணிக்க இருக்கறது.

இன்று முழுவதும் மழை
இதன் காரணமாக, எதிர்பார்த்ததுபோல 28-ம் தேதி இன்று, சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், மற்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் கிழக்கு பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிழக்கு ஓரம், தருமபுரி மாவட்ட கிழக்கு ஓரம், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தின் வடகிழக்கு பகுதி, நாமக்கல் மாவட்டத்தின கிழக்கு பகுதியின் ஓரங்களில் காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது.. இன்று முழுவதும் பெய்யக்கூடும்,

கனமழை
தமிழகத்தின்ஆங்காங்கே திண்டுக்கல், தென்காசி ஆங்காங்கே பெய்து வருகிறது. இன்று பகலை பொறுத்தவரைக்கும் உள்மாவட்டங்களில் நுழைந்து மேற்கு மாவட்டங்களில் முன்னேறி, மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் வரை மழை தொடங்க உள்ளது.

29-ம் தேதி
நாளை 29-ம் தேதி பரவலாகவே சற்று கனமழை பெய்யும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்குமே நாளை நல்ல மழை பெய்யும். பழவேற்காடு முதல் கன்னியாகுமரை வரை அனைத்து மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் வரை நாளை நல்லமழை காத்து கொண்டிருக்கிறது.

30-ம் தேதி
30-ம் தேதியை பொறுத்தவரைக்கும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாகவே கனமழை உள்ளது. குறிப்பாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் அனைத்து தென்மாவட்டங்களுமே திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, அனைத்து தென்மாவட்டங்கள், மற்றும் அரியலூர், வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது.

30-1ம் தேதிகள்
இதே 30-ம் தேதியும் 1-ம் தேதியும், தமிழகத்தின் அனத்து மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, பெங்களூர் வரை முன்னேறி இந்த மழை பெய்யும்.. இந்த சுற்று தாழ்வு நிலையில் 2-ம் தேதி வரை கனமழை உள்ளது. அதற்கு பிறகு 2-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு புதிய சிஸ்டம் ஒன்று இலங்கை மீது ஏற இருக்கிறது. அந்த சிஸ்டம் செங்கல்பட்டு மாவட்டம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இதற்கு தெற்கே அனைத்து மாவட்டங்களுக்கும் நல்ல மழைகொடுக்க வாய்ப்பு உள்ளது.

7-ம் தேதி வரை...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு வரக்கூடிய உயரழுத்தம் காரணமாக இடையூறு தர வாய்ப்பு உள்ளது. ஆனால், இன்று தொடங்கி இருக்கக்கூடிய இந்த மழை செங்கல்பட்டுக்கு தெற்கே 7-ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களுக்கும் மழை இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரங்களில் இன்று பெய்யும் மழை நாளை கூடும்.. நாளை பெய்யும் மழை, 30-ம் தேதி கூடியிருக்கும்.. 30-ம் தேதியும், 1-ம் தேதியும் அதே நிலை நீடித்து கொண்டிருக்கும்" என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications