பத்திரப்பதிவு.. சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்வதில் வருகிறது புதிய மாற்றம்.. ஹேப்பி அறிவிப்பு
சென்னை: பத்திரப்பதிவு முறையில், பொதுமக்களின் நன்மைக்காக விரைவில் புதிய மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வருடம் சட்டமன்ற கூட்டத்தொடரில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசும்போது, சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

அமைச்சர் மூர்த்தி: குறிப்பாக அமைச்சர் அப்போது சொல்லும்போது, "பத்திரப்பதிவை குறைந்த காலத்தில் முடிப்பதற்கு வசதியாக, கூடுதல் கட்டணம் பெற்று தட்கல் முறையில் டோக்கன்கள் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, முதற்கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்வுசெய்யப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். முன்பதிவு டோக்கனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணமாக விதிக்கப்படும்" என்று பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பதிவுத்துறை செயலாளர் சார்பில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில், "ஆவணத்தைப் பதிவு செய்வதற்கு, பொதுமக்கள் பத்திரப்பதிவு இணையதளத்தில் தங்களின் விவரங்களை உள்ளீடு செய்கின்றனர். அப்போது, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுசெய்வதற்கான, நேரமும் தேதியும் பார்வையிட இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிக்கல்கள்: பதிவு செய்வதற்கு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நாளொன்றுக்கு ஆறு ஸ்லாட்களாக 100 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஒருசில அலுவலகங்களில் இரண்டு சார்பதிவாளர்கள் 200 பதிவுகளை மேற்கொள்கிறார்கள். இருந்தபோதிலும், அதிகபட்ச டோக்கன்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றமடைகிறார்கள்.
இந்த நிலையில்தான், பொதுமக்கள் தங்களின் விருப்பப்படி பதிவுசெய்யும் வகையில் ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டோக்கன் பெற ஏதுவாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தட்கல் முன்பதிவு தொடங்கும். இந்த தட்கல் டோக்கன் வழங்கும் முறை தேர்வு செய்யப்பட்ட 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படும். தட்கல் டோக்கன்களில் தற்போதைய நடைமுறைபோலத்தான் இதுவும் செயல்படுத்தப்படும்.
தட்கல் டோக்கன்: தட்கல் டோக்கன் பெற்றுவிட்டு அந்த நேரத்தில் அவர்கள் பதிவுக்கு வரவில்லை என்றால் அந்த டோக்கன் செல்லாது. அவர்கள் டோக்கனுக்குச் செலுத்திய கட்டணத்தையும் திரும்பப் பெற முடியாது. இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தட்கல் முன்பதிவு தொடங்கும். இந்த தட்கல் டோக்கன் வழங்கும் முறை தேர்வு செய்யப்பட்ட 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படும். சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணிவரை மொத்தமுள்ள ஆறு ஸ்லாட்டுகளில் நாளொன்றுக்கு 10 தட்கல் டோக்கன்கள் வரை வழங்கப்படும்." என்பது உட்பட பல்வேறு விஷயங்கள் அதில் விரிவாக எடுத்து சொல்லியிருந்தது.

ஆன்லைன் சிஸ்டம்: இந்நிலையில், சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்ய, நேரம் ஒதுக்கி வழங்கப்படும் டோக்கன்களை பயன்படுத்துவதில், விரைவில், புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.. தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகள், ஆன்லைன் முறையில் உள்ளதால், பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும், அதற்கான இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.. இதன் அடிப்படை சரிபார்ப்பு முடிந்ததுமே, விண்ணப்பதாரரின் விருப்பம், சார் - பதிவாளரின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான, டோக்கன்கள் வழங்கப்படும்..
டோக்கன் சிஸ்டம்: இப்போது, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், ஒரு நாளைக்கு, 100 முதல், 200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.. இந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜரானால், உடனடியாக பத்திரப்பதிவு பணிகள் முடிந்து விடும். இதில், குறிப்பிட்ட நேரத்திற்கு விண்ணப்பதாரர்கள் வராதது, பணிகள் தாமதம் போன்ற காரணங்கள் ஏற்பட்டால், அந்த டோக்கன் நம்பர், அதே நாளில் வேறு நேரத்துக்கு மாற்றப்படும்.
இவ்வாறு நேரம் தவறும் டோக்கன்களுக்கு உரிய நபர்கள், ஒரே நேரத்தில் வருவதால், மாலையில் நீண்ட நேரம் பத்திரப்பதிவு நடத்தப்பட வேண்டியிருக்கிறது.. மேலும், இதனால், சார் - பதிவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிறைய சிரமம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.. இதுகுறித்து, பதிவுத்துறை அலுவலர்கள் சொல்லும்போது, பத்திரப் பதிவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வரத்தவறும் விண்ணப்பதாரர்களுக்கு, அதே நாளில், மறுமுறை, நேரம் ஒதுக்குவதால், மாலையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன....
வெளியூரில் இருந்து வருபவர்களால், ஒரேநாளில், வேலையை முடிக்க முடிவதில்லை. நீண்டநேரமாக இதற்காக காத்திருக்கும் நிலைமை ஏற்படுகிறது. அதனால்தான், இப்படியொரு சங்கடம் வராமல் இருக்க புது நடைமுறை கொண்டுவர யோசனை உள்ளது..

முறைப்படி அறிவிப்பு: டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் பதிவு நடக்கவில்லை என்றால், அந்த டோக்கனை மறுமுறை பயன்படுத்த முடியாதபடி ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.. இதனால், தேவையின்றி அன்றைய தினம் முழுவதும் காத்திருக்கும் கூட்டமும் தவிர்க்கப்படும். இது தொடர்பாக, பதிவுத் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகிறார்கள்.. விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், குறித்த நேரத்தில் பத்திரப்பதிவு செய்தாக வேண்டும் என்ற எண்ணமும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும்"என்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications