வெள்ளை போர்வைகள் விடைபெற்றன.. ஏசி ரயில் பெட்டிகளில் இனிமே இதுதான் பெட்ஷீட்.. ரயில்வே சூப்பர் மாற்றம்
சென்னை: ரயில் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே நிர்வாகம் ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது.. ரிசர்வேஷன் முதல் தட்கல் வரை டிக்கெட் புக்கிங்கிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, அது தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. மற்றொருபுறம் பயணிகளின் பாதுகாப்பையும் ரயில்வே நிர்வாகம் உறுதிசெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஏசி ரயில் பெட்டிகளில் முக்கிய மாற்றம் நடந்துள்ளது. அது என்ன?
ரயில் பயணிகளின் நன்மையையும், வசதியையும் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. இதனால் ரயில்வே நிர்வாகத்துக்கு பல்வேறு வழிகளில், ஏராளமான பண இழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நஷ்டமாகும் செலவை சமாளிக்க முடியாமலும் திணறி கொண்டுதான் இருக்கிறது.. அதனால்தான் சமீபகாலமாக சில கண்டிப்பு நடவடிக்கைகளையும் கையில் எடுத்து வருகிறது.. குறிப்பாக, படுக்கை விரிப்புகள் தொடர்பான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
படுக்கை விரிப்புகள், தலையணை
அதாவது தொலைதூர ரெயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 1 போர்வை, 1 தலையணை, 2 படுக்கை விரிப்புகள், முகம் துடைக்க ஒரு துண்டு போன்றவை ரெயில்வே சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆனால், இவைகளை எல்லாம் வடமாநில பயணிகள் சிலர், ஸ்டேஷனை விட்டு இறங்கும்போது, தங்கள் உடைமைகளுடன் சேர்த்து கையோடு எடுத்து சென்றுவிடுகிறார்களாம்.. இப்படி ரயில்வே பொருட்களை களவாடி சென்றுவிடுவதால், ரெயில்வேக்கு வருடத்துக்கு ரூ.1 கோடிக்கு இழப்பு ஏற்படுகிறதாம்.
எனவேதான், ரயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகள், துண்டு போன்ற அனைத்து பொருட்களும், அதே எண்ணிக்கையில் உள்ளதா? என்று ரயில் கடைசியாக வந்து சேரும் ரெயில் நிலையத்துக்கு முன்பு கண்காணிக்க வேண்டும் என்று ரயில்வே ஊழியர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டிருக்கிறது.. அதன்படியே ரயில்வே ஊழியர்களும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏசி பெட்டி ரிசர்வேஷன்
இந்நிலையில், வெள்ளை படுக்கை விரிப்புகள் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.. அதாவது, ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்கள் பெரும்பாலும், நீண்ட தூரம் பயணிப்பவர்களாகவே உள்ளனர். இந்த ஏசி பெட்டிகளுக்காக ரிசர்வேஷனும் முன்கூட்டியே செய்து கொள்கிறார்கள்.
இவர்களுக்கு இரவில் தூங்குவதற்கு வசதியாக வெள்ளை படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சில ரயில்களில் மட்டும் வெள்ளை துண்டுகள் வழங்கப்படுகின்றன
ஏசி ரயில் பெட்டிகள் போர்வை
ஆனால் இனிமேல். ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு வெள்ளை படுக்கை விரிப்புகள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. வெள்ளைக்கு பதிலாக, பருத்தி துணியால் செய்யப்பட்ட டிசைனிங் போர்வைகள் வழங்கப்பட உள்ளதாம்.
காரணம், வெள்ளை நிற பெட்ஷீட்டை பார்த்தாலே சிலருக்கு மருத்துவமனை நினைவுக்கு வந்துவிடுகிறதாம்.. அதுமட்டுமல்ல, வெள்ளை படுக்கை விரிப்புகளில் கறை படிந்துவிடுவதால் அவை லேசில் போவதில்லை.. அதை சுத்தப்படுத்தினாலும் பயணிகள் மறுபடியும் பயன்படுத்த தயங்குகிறார்கள்.
விடைபெறும் வெள்ளை போர்வைகள்
வழக்கமாக மாதம் 2 முறை மட்டுமே வெள்ளை போர்வைகள் சுத்தம் செய்வதால், பெரும்பாலும் அழுக்காகவே உள்ளது.. இது பயணிகளின் சுகாதாரத்தையும் பாதிக்கிறது.
எனவேதான், பயணிகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, பருத்தி துணி போர்வைகள் வழங்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். .
வெள்ளை போர்வைகள் விடைபெற்றுள்ள நிலையில், பருத்து துணியிலான பெட்ஷீட்களை, முதல்கட்டமாக ஜெய்ப்பூர்-அசர்வா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸில் வழங்கப்பட்டுள்ளன.. இனிமேல் மற்ற அனைத்து ரயில்களிலும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications