வெள்ளைப் போர்வையை விடுங்க.. ஸ்லீப்பர் கிளாஸில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள்! சபாஷ் தெற்கு ரயில்வே
சென்னை: ரயில் பயணிகளின் நன்மையையும், வசதியையும் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. அந்தவகையில், தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு, ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை தற்போது அறிவித்துள்ளது. அது என்ன தெரியுமா?
ரயில்வேயை பொறுத்தவரை, ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்கள் பெரும்பாலும், நீண்ட தூரம் பயணிப்பவர்களாகவே இருப்பார்கள்.. இவர்களுக்கு இரவில் தூங்குவதற்கு வசதியாக வெள்ளை படுக்கை விரிப்புகள், போர்வைகள், தலையணைகள் வழங்குவது வழக்கமாகும்..

AC பெட்டிகளில் வெள்ளை போர்வை
எனினும் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு வெள்ளை படுக்கை விரிப்புகள் வழங்கப்படாது என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.. வெள்ளைக்கு பதிலாக, பருத்தி துணியால் செய்யப்பட்ட டிசைனிங் போர்வைகள் வழங்கப்பட முடிவாகி உள்ளது.
ஏனென்றால், வெள்ளை நிற பெட்ஷீட்டை பார்த்தாலே சிலருக்கு மருத்துவமனை நினைவுக்கு வந்துவிடுகிறதாம்.. மேலும், வெள்ளை படுக்கை விரிப்புகளில் கறை படிந்துவிடுவதால் அவை எளிதில் போவதில்லை. சுத்தப்படுத்தினாலும்கூட பயணிகள் அதையே மீண்டும் பயன்படுத்த தயங்குகிறார்கள்...
எனவேதான் பயணிகளின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, பருத்தி துணி போர்வைகள் வழங்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்ததுடன், முதல்கட்டமாக ஜெய்ப்பூர்-அசர்வா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸிலும் வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார். இந்த நடைமுறையானது, மற்ற மாநிலங்களும் விரைவில் கொண்டுவரப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்லீப்பர் கிளாஸ் - படுக்கை விரிப்புகள்
இந்நிலையில், சென்னை பிரிவில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகளை வழங்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணிகள், இனி பயணத்தின்போது சுகாதாரமான மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட படுக்கை விரிப்புகளைக் கட்டண அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
முதற்கட்டமாக 10 ரயில்களில் படுக்கை விரிப்புகள் வழங்கும் வசதி செயல்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
படுக்கை விரிப்புகள்
இதற்கு பிறகு வரும் ஜனவரி 1 முதல் ஏ.சி. ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகள் கட்டண அடிப்படையில் கிருமி நீக்கம் (Sanitized) செய்யப்பட்ட படுக்கை விரிப்புகளை கோரலாம்..
படுக்கை விரிப்புகள் கோரும் பயணிகள், அதற்கென நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, இந்த கிருமி நீக்கம் செய்யப்பட்ட விரிவுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பில் விரிப்பு, கம்பளி, தலையணை, கை துண்டு போன்றவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பானது பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.காரணம், பொதுவாக, படுக்கை விரிப்புகள் ஏ.சி. வகுப்புகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இப்போது ஸ்லீப்பர் வகுப்பிற்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.. அந்தவகையில், நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் இந்த அறிவிப்பானது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications