பஞ்சு பஞ்சாய்.. அடடா அந்த ருசி இருக்கே! டூடுலில் இட்லி! தென்னிந்திய உணவின் பெருமையை கொண்டாடிய கூகுள்
சென்னை: உலகம் முழுவதும் பிரபலமான தென்னிந்திய உணவுகளில் முதலிடம் வகிப்பது 'இட்லி'. இன்று, அந்த இட்லிக்கு உலகளாவிய கௌரவத்தை வழங்கியிருக்கிறது கூகுள். இன்று (அக்டோபர் 11) கூகுள் தனது முகப்புப் பக்கத்தில் 'இட்லி டூடுலை' வெளியிட்டு சிறப்பு சேர்த்துள்ளது.
பொதுவாக முக்கிய தினங்கள், வரலாற்று நிகழ்வுகள் அல்லது பிரபலமான நபர்களை நினைவுகூர கூகுள் டூடுல்களை வெளியிடும். ஆனால் இன்று வெளியிடப்பட்ட டூடுள் ஒரு உணவுக்காக - அதுவும் நம் தென்னிந்தியர்களின் காலை உணவு கிங்கான இட்லிக்காக!
இந்த டூடுளில் "Google" என்ற வார்த்தையில் ஒவ்வொரு எழுத்தும் இட்லி தயாராகும் விதம், அதை ஆவியில் வேகவைப்பது, சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறப்படுவது போன்ற காட்சிகளைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ஜி' என்ற எழுத்து அரிசி மற்றும் உளுந்தைக் குறிக்க, 'ஓ' இட்லி மாவு இருக்கும் பாத்திரமாகவும், மற்றொரு 'ஓ' இட்லி வேகும் வடிவமாகவும், 'எல்' இணை உணவுகளுடன் அமைந்துள்ளது. முழு டூடுள் வாழை இலையில் பரிமாறப்பட்டிருப்பதே அதற்கு ஒரு தனி அழகை சேர்த்துள்ளது.

இது பற்றிய விளக்கத்தில் கூகுள், "இந்த டூடுள் எங்கள் 'Food & Drinks' தொடர் டூடுள் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் தென்னிந்திய உணவைக் கொண்டாடும் வகையில் அக்டோபர் 11 அன்று வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.
இட்லியின் தோற்றம் குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. சில வரலாற்று ஆய்வுகள், இட்லி இந்தியாவின் பூர்வீக உணவல்ல, இது இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என கூறுகின்றன. குறிப்பாக இந்தோனேசியாவிற்கு வணிகம் செய்ய சென்ற இந்திய வணிகர்கள், அங்கிருந்து இதன் செய்முறையை கற்றுக் கொண்டு நம் நாட்டில் அறிமுகப்படுத்தியதாகக் கருதப்படுகிறது. மற்றொரு கூற்றின்படி, அரேபிய வணிகர்களே இட்லியை தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாதபோதிலும், இன்று இட்லி தென்னிந்தியர்களின் அடையாள உணவாக உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலகத்தின் பல நாடுகளிலும் 'இட்லி', 'தோசை', 'சாம்பார்' என்ற சொற்கள் அப்படியே பயன்பாட்டில் உள்ளன என்பது நம் உணவுக் கலாச்சாரத்தின் பெருமை.
அதனை நினைவுகூரும் விதமாக, இன்று கூகுள் டூடுளில் வாழை இலையில் பரிமாறப்பட்ட இட்லி, சாம்பார், சட்னி, இட்லி மாவு, இட்லிப் பொடி ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளது நம் தென்னிந்திய உணவின் உலகளாவிய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
உலக அளவில் மார்ச் 30ம் தேதி தான் உலக இட்லி தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் அக்டோபர் 11ஆம் தேதி அன்று இட்லிக்கு கூகுள் டூடுல் வெளியிட்டு இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications