Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழியர் ஒருவருக்கு திடீரென 300% ஹைக் தந்த கூகுள் நிறுவனம்.. காரணம் "சென்னை".. அடடா.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் வேறு நிறுவனத்திற்கு செல்ல கூடாது என்பதற்காக ஒரு ஊழியருக்கு கூகுள் நிறுவனம் 300% சம்பள உயர்வு வழங்கி உள்ளது.

Perplexity AI என்ற நிறுவனத்திற்கு மாற திட்டமிட்ட ஊழியருக்கு கூகுள் நிறுவனம் 300% சம்பள உயர்வு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. Perplexity AI இன் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த நிகழ்வை பிக் டெக்னாலஜி பாட்காஸ்டில் வெளிப்படுத்தினார். ஐஐடி-மெட்ராஸ் முன்னாள் மாணவர் ஸ்ரீனிவாஸ் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை ஐஐடி-மெட்ராஸ் முன்னாள் மாணவர்கள் மூலம் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறதாம்.

Google gave 300% hike to an employee amid recession hits the IT field all over the world

அவர் நடத்தும் இந்த நிறுவனத்திற்கு தங்கள் ஊழியர் செல்வதை தடுக்க கூகுள் நிறுவனம் 300% சம்பள உயர்வு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் ஊழியர்களைத் தக்கவைக்க எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இதை செய்துள்ளது.

3 மடங்கு சம்பள உயர்வைப் பெற்ற அந்த ஊழியர் சர்ச் டீமின் ஒரு பகுதியாக இருந்தார் என்றும் அதன் AI பிரிவில் நேரடி தொடர்பு இல்லை என்றும் ஸ்ரீனிவாஸ் கூறி உள்ளார். ஏஐ பிரிவில் தொடர்பு இல்லாதவருக்கு கூட இவ்வளவு அதிக சம்பளம் கொடுக்க கூகுள் தயாராக உள்ளது.

தொழில்நுட்ப துறையில் பணிநீக்கங்கள் இருந்தாலும், உற்பத்தித்திறனுக்கு விகிதாசாரத்தில் பங்களிக்காத அதிக சம்பளம் உள்ளவர்களையே நிறுவனங்கள் குறிவைக்கின்றன என்றார். மத்தபடி அதிக திறன் உள்ளவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. திறமை இருந்தாலும் கண்டிப்பாக உங்களை நிறுவனங்கள் எவ்வளவு தொகை கொடுத்தும் தக்க வைத்துக்கொள்ளும் என்பதை கூகுளின் செயல் காட்டுவதாக Perplexity AI இன் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

2023ல் இருந்து அதிகரித்து தொழில்நுட்ப துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. 2024 ஜனவரியில் இது உச்சம் தொட்டுள்ளது.. 2023ல் வருடம் முழுக்க 240,000 வேலைகள் இழக்கப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 50% அதிகமாகும்.

தொழில்நுட்ப துறைகளில் செய்யப்படும் பணிநீக்கங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. ஜனவரி மாதத்தில் இருந்து ஐடி துறையில் மீண்டும் பணவீக்கம் அதிகரிக்க தொடங்குவதாகத் தெரிகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது வளர்ச்சியை விட செயல்திறனில் அதிக கவனம் செலுத்துகின்றன, மேலும் சவாலான சந்தை நிலைமைகள், மேற்கு உலக நாடுகளில் நிலவும் மந்த நிலை காரணமாக ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளன.

ஒரே போன் கால்: உதாரணமாக Frontdesk நிறுவனத்தின் CEO, 2 நிமிட போன் கால் மூலம் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களையும் (200 பேர்) பணிநீக்கம் செய்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராப்-டெக் நிறுவனமான Frontdesk, 200 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது. CEO Jesse DePinto இரண்டு நிமிட Google Meet அழைப்பின் போது இந்த செய்தியை ஊழியர்களிடம் வெளியிட்டார். நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவிப்பதற்குப் பதிலாக மாநில ரிசீவர்ஷிப்பிற்கு செல்ல முடிவு செய்துள்ளது.

கூகுள்: அதேபோல் Alphabet இன் கூகுள் தனது டிஜிட்டல் உதவியாளர், வன்பொருள் மற்றும் பொறியியல் குழுக்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கூகுள் தனது விளம்பர விற்பனை குழுவில் உள்ள நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பு அறிக்கையில், சில குழுக்கள் இந்த வகையான நிறுவன மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றன, இதில் உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது.

மைக்ரோசாப்ட் : அதேபோல் மைக்ரோசாப்ட் ஆக்டிவிஷன் ப்ளிஸார்ட், எக்ஸ்பாக்ஸ் மற்றும் ஜெனிமேக்ஸ் ஆகியவற்றிலிருந்து 1,900 பேரை வேலையை விட்டு நீக்கி உள்ளது, இது மொத்த மைக்ரோசாஃப்ட் கேமிங் பிரிவில் சுமார் 8% ஆகும். Mike Ybarra and Allen Adham நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை வடிவமைப்பு அதிகாரி ஆலன் ஆதம் கூட நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+