நிமிரும் தமிழ்நாடு.. கூகுள் - HP இந்தியாவில் முதல்முறை தயாரிக்கும் “குரோம்புக்” - நம்ம சென்னையில்
சென்னை: கூகுள் நிறுவனம் எச்.பி. நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக குரோம்புக்கை சென்னையில் தயாரிக்க உள்ளது.
கூகுள் நிறுவனம் தனது கணினி இயங்குதளமான குரோம் மூலமாக சாம்சங், எச்பி, ஏசுஸ், லெனோவோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து குரோம்புக் லேப்டாப்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக குரோம்புக் லேப்டாப்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்து இருக்கிறது.

இதற்காக எச்பி நிறுவனத்துடன் கூகுள் கைகோர்த்து இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்படும் இந்த குரோம்புக்குகள் சென்னை அருகே உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் எச்.பி நிறுவனத்தின் லேப்டாப்கள், கணினிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் கூகுள் - எச் நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தத்தை அடுத்து சென்னை தொழிற்சாலையில் இந்த மாதம் முதல் குரோம்புக் லேப்டாப்புகள் உற்பத்தியும் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி இருக்கும் குரோம்புக் வகை லேப்டாப்புகள் தற்போது ஆன்லைன் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
வழக்கம்போல் கூகுளின் குரோம் இயங்குதளத்துடன் தயாரிக்கப்படும் இந்த குரோம்புக் லேப்டாபுகள், வகுப்பறையில் பயன்படுத்துவதற்கு தேவையான செயலிகள், பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது. பள்ளிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் கற்றல் திறனை அதிகரிக்கவும், கல்வி கற்பத்தல் முறையை தொழில்நுட்ப ரீதியாக தரம் உயர்த்தும் நோக்கும் இந்த குரோம்புக்கை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதை வாங்கும் பயனருக்கு 10 ஆண்டுகளுக்கு தேவையான ஓஎஸ் அப்டேட்டுகளை வழங்குவதாகவும் கூகுள் உறுதி அளித்து உள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் பகுதியாக இந்தியாவின் இந்த லேப்டாப்புகளை தயாரிக்க உள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்து உள்ளன. இது தொடர்பாக எச்.பி நிறுவனம் செய்திக்குறிப்பை வெளியிட்டு உள்ளது.
அதில், "இந்தியாவில் டிஜிட்டல் கல்வி மூலம் மாணவர்களுக்கு பாதுகாப்பாகன, குறைந்த செலவிலும், தரமனான கல்வி சூழலை உருவாக்க நாங்கள் இணைந்து உள்ளோம். இந்த உயர் தொழில்நுட்பம் கொண்ட கருவிகளை மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்குகிறோம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

சென்னை அருகே உள்ள பிளெக்ஸ் பெசிலிட்டி என்ற தொழிற்சாலையில்தான் இந்த குரோம்புக்குகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் எச்.பி. லேப்டாப், கணினிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த குரோம்புக்களை உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்தி வருகிறார்கள்.
எச்.பி நிறுவனத்தின் மூத்த இயக்குநர் விக்ரம் பேடி தெரிவிக்கையில், "குரோம்புக்குகள் மூலமாக குறைந்த செலவில் இந்திய மாணவர்கள் கணினியை கையாளும் சூழல் ஏற்படும். இந்த திட்டத்தின் மூலம் அரசின் மேக் இன் இந்தியா முன்னெடுப்பையும் நாங்கள் ஆதரிக்கிறோம்." என்றார். கூகுள் நிறுவனத்தின் தெற்கு ஆசிய கல்வி பிரிவு தலைவர் பானி தவான் கூறுகையில், "இந்தியாவில் கல்வி கற்றலை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி இது." என்று தெரிவித்து உள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications