கோவா பீச்சில் இரவில் தவித்த வெளிநாட்டு பெண்… சொதப்பிய கூகுள் மேப்! தேவதையாக வந்த ரேபிடோ பெண் டிரைவர்
சென்னை: வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர், கோவாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.. கூகுள் மேப்பை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி தனியாக இந்தியா வந்திருக்கிறார்.. திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சம்பவம், அந்த வெளிநாட்டு பயணியை நிலைகுலைய வைத்துவிட்டது.. இறுதியில் என்ன நடந்தது? இந்த செய்தி தற்போது இணையம் முழுக்க வலம்வர என்ன காரணம்? சுருக்கமாக பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் பயணங்களுக்கான முக்கிய துணையாக கூகுள் மேப் மாறியுள்ளது. புதிய நகரம், அறிமுகமில்லாத சாலைகள், குறுக்கு வழிகள் என அனைத்தையும் எளிதாக கண்டுபிடிக்க கூகுள் மேப்பை பெரும்பாலானோர் நம்புகிறார்கள்...

குறிப்பாக சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் உள்ளிட்டோர் தங்கும் இடம், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வழிகள் போன்றவற்றை அறிந்து கொள்ள இந்த செயலியை நிறைய பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும், செல்போன் சிக்னல் இல்லாத பகுதிகள், தொழில்நுட்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் சில நேரங்களில் கூகுள் மேப் சரியாக செயல்படாமல் போகும் சூழலும் ஏற்படுகிறது.
இரவில் மோசம் செய்த கூகுள் மேப்
அப்படி ஒரு நெருக்கடியான தருணத்தைதான் இந்த வெளிநாட்டு பெண் கோவாவில் சந்தித்துள்ளார்.. மும்பை கடற்கரை பகுதிக்கு வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர் வந்துள்ளார்... அங்கே பீச்சை முழுமையாக சுற்றிப்பார்த்துவிட்டு, இரவு 10 மணிக்கு தான் தங்கியுள்ள ஹோட்டலுக்கு திரும்ப நினைத்தார்.. இதற்காக கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார்.
ஆனால், செல்போன் சிக்னல் பீச்சில் சரியாக கிடைக்கவில்லை... ஒருகட்டத்தில் கூகுள் மேப் செயல்படாமலும் போய்விட்டது.. இதனால் ஓட்டலுக்கு போக வழி தெரியாமல், அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்... மும்பையின் கொலாபா பகுதியில் தனியாக அந்த இரவு நேரத்தில் சிக்கி தவித்துள்ளார். இருள் சூழ்ந்த சாலைகள், அறிமுகமில்லாத இடம், மொழி புரியாத சூழலில், கலக்கமும் கண்ணீருமாக சாலையில் நடந்து வந்தள்ளார்..
ரேபிடோ பெண் டிரைவர் சிந்து
அப்போது அந்த வழியாக ரேபிடோ பைக்கில் பெண் ஓட்டுநர் சென்று கொண்டிருந்தார்.. அவரது பெயர் சிந்து குமாரி... வெளிநாட்டு பெண் சாலையில் கண்ணீருடன் நடப்பதை பார்த்து அருகில் சென்று விசாரித்துள்ளார்..
அவரது நிலைமையை உணர்ந்த ரேபிடோ பெண் ஓட்டுனர் சிந்து, எந்த தயக்கமும் இன்றி உதவ முன்வந்துள்ளார். அவர் சொன்ன அடையாளம், சைகைகளை வைத்து, அந்த பெண் சுற்றுலா பயணி தங்கியிருந்தது 'ஹோட்டல் கோக்கனட்' என்பது சிந்துவுக்கு தெரியவந்தது... உடனே தன்னுடைய ரேபிடோ பைக்கில் பெண் பயணியை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று, நேரடியாக அந்த ஓட்டலில் சென்று பத்திரமாக ஒப்படைத்தார் சிந்து..
கட்டிப்பிடித்து கண்ணீர் நன்றி
ஓட்டலுக்குள் கால் வைத்த பிறகுதான் அந்த வெளிநாட்டு பயணிக்கு நிம்மதியே வந்தது.. சிந்து குமாரியை கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.. இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு விட்டனர்.. அது தற்போது வைரலாகி வருகிறது.
ஆபத்தான சூழ்நிலையில், நள்ளிரவில் துணிச்சலுடன் செயல்பட்டு, ஒரு வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியின் பாதுகாப்பை உறுதி செய்த சிந்து குமாரியின் மனிதாபிமானத்தை இணையவாசிகள் பாராட்டி தள்ளி கொண்டிருக்கிறார்கள்...!!!
கோவா பீச்சில் வெளிநாட்டு பயணியின் நிலைமையை உணர்ந்த ரேபிடோ பெண் ஓட்டுனர் சிந்து, எந்த தயக்கமும் இன்றி உதவ முன்வந்துள்ளார். அவர் சொன்ன அடையாளம், சைகைகளை வைத்து, அந்த பெண் சுற்றுலா பயணி தங்கியிருந்தது 'ஹோட்டல் கோக்கனட்' என்பது சிந்துவுக்கு தெரியவந்தது... உடனே தன்னுடைய ரேபிடோ பைக்கில் பெண் பயணியை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று, நேரடியாக அந்த ஓட்டலில் சென்று பத்திரமாக ஒப்படைத்தார் சிந்து..












Click it and Unblock the Notifications