சென்னையில் வங்கியை தேடி சென்றவருக்கு கூகுள் மேப் தந்த ட்விஸ்ட்
சென்னை: சென்னையை பொறுத்தவரை தெரிந்தவர், தெரியாதவர் என எல்லாருமே சாலையில் பயணிக்கும் போது கூகுளில் வழிதேடல்களை பயன்படுத்துகிறார்கள்.. ஆனால் அவர்கள் அப்படி தேடிப்போகும் போது சற்றும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கின்றன. ஏனெனில் கூகுளில் நீங்கள் தேடி போகும் இடங்கள் இருப்பது இல்லை.. பொதுவாக வங்கிகள், ஏடிஎம்களை தேடிப்போகும் போது, இதுபோல் அடிக்கடி நடக்கின்றன.
கூகுள் மேம்பை நம்பி போனால் பெரும்பாலும் சரியாகவே இருக்கும். ஆனால் சில சமயங்களில் நாம் சற்றும் எதிர்பார்க்காத சம்பவங்களும் நடக்கின்றன. அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கூகுள் மேப்பை நம்பி பயணித்தவர் நடுகாட்டில் சேற்றில் சிக்கினார். இதேபோல் சென்னை பள்ளிக்கரணையில் கூகுள் மேப்பை பயன்படுத்தி பயணித்த சாப்பாடு டெலிவரி ஊழியர், சதுப்பு நில ஏரிக்குள் சிக்கி தவித்தார்.

இதேபோல் கூகுள் மேப்பை நம்பி கேரளாவில் காரில் சென்றவர்கள் கிணற்றில் விழுந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதேபோல் உத்தரப்பிரதேசத்திலும் சில முறை சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஹைதராபாத்திலும் வங்கியை தேடிப்போனவரை கடைசியில் முட்டுசந்தில் நிறுத்தியது. சிலருக்கு சுடுகாட்டை கூட வழிகாட்டியிருக்கிறது.
அந்த வகையில் சென்னை கீழ்க்கட்டளையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். சென்னை கீழ்க்கட்டளையில் கனரா வங்கியை தேடி கூகுள் மேப்பை நம்பி பயணித்துள்ளார் ஒருவர்.. சரியாக இரண்டு கிலோ மீட்டர் பல சந்துக்குள் நுழைந்து, பயணித்து சரியான இலக்கிற்கு சென்றுள்ளார். ஆனால் அப்படி ஒரு வங்கியே அங்கு இல்லை.. ஆனால் முன்பு அங்கு இருந்துள்ளது.. இப்போது அங்கு இல்லை என தெரிகிறது. சரி கோவிலம்பாக்கத்திற்கு போகலாம் என்று போனால், அங்குமே கனரா வங்கியை காட்டவில்லை.. சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றி சென்று பார்த்தால் கனரா வங்கிக்கு பதில் ஏடிஎம் தான் இருக்கிறது..
இறுதியாக என்ன செய்வது என்று யோசித்த அந்த நபர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மூவரசம்பட்டுவை தாண்டினால் மடிப்பாக்கத்தில் கனரா வங்கி உள்ளதாக கூறியிருக்கிறார்கள்... அதன்பின்னர் மீண்டும் இரண்டு கிலோ மீட்டர் பயணித்த போதுதான் கனரா வங்கிக்கு போக முடிந்தது.. இதேபோல் ஏடிஎம்கள், வங்கிகளை தேடி செல்பவர்கள் தவறான இடத்திற்கு செல்வது அதிகமாக உள்ளது. வங்கிக்கு பதில் ஏடிஎம்மை காட்டுவது, பணம் நிரப்பும் இயந்திரம் உள்ள ஏடிஎம்மை தேடினால், வெறும் ஏடிஎம்மை காட்டுவது அதிகமாக உள்ளது. அதேபோல் சென்னையில் இன்னும் சில சிக்கல்கள் கூகுள் மேப்ப்பில் உள்ளது.
குறிப்பாக கூகுளில் சில பாதைகள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாக உள்ளன. சில இடங்களில் சிலர் தவறாக பதிவு செய்வதால், சுற்றி செல்லும் நிலை ஏற்படுகிறது. சில இடங்களில் ரயில்வே பாதை இருக்கும். அதனை கவனிக்காமல் மாட்டிக்கொண்டவர்கள் அதிகம். கூகுள் பெரும்பாலும் சரியாக காட்டும் என்றாலும், சில பாதைகளை சிலர் தவறாக பதிவு செய்வதே இந்த சிக்கல்களுக்கு காரணமாக உள்ளது. அப்படியான சூழலில் அக்கம் பக்கத்தினரை கேட்டு செல்வது நல்லது.












Click it and Unblock the Notifications