கூகுள் பே, போன் பே செயலிகளில் விரைவில் பண பரிவர்த்தனை வரம்பு அமலாகிறதா?
சென்னை: கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளில் மேற்கொள்ளப்படும் வரம்பு இல்லா பண பரிவர்த்தனைகளுக்கு விரைவில் வரம்பு விதிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
இந்த வரம்பு விதிப்பதற்கான பணிகளை இந்தியாவில் யுபிஐ டிஜிட்டல் சிஸ்டத்தை கவனித்து வரும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ரிசர்வ் வங்கி ஆகிய இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் இன்றைய தினம் ஃபிராக்ஷன் ஆப் செகண்ட்ஸ்களில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக நிறைய யுபிஐ செயலிகள் உள்ளன. உதாரணமாக கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் உள்ளன.

போன் டவுன்லோடு
இந்த செயலிகளில் ஏதேனும் ஒன்றை நாம் போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதை நம் வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு யுபிஐ ஐடியும் பின் நம்பரும் வழங்கப்படும். அதை கொண்டு நமது கான்டாக்ட் லிஸ்டில் இருக்கும் நபர்களின் செல்போன் எண்களும் இந்த செயலிகளை டவுன்லோடு செய்திருந்து அவர்களுடைய வங்கிக் கணக்குடன் இணைந்திருந்தால் போதும்.

வரம்பு
உட்கார்ந்த இடத்திலிருந்து இந்தியாவில் எந்த மூலைக்கும் பணத்தை அனுப்பலாம், பெறலாம். வங்கிகளில் நேரடியாக போய் பணத்தை எடுப்பதற்கு ஒரு நாளைக்கு 1 லட்ச ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். அது போல் ஏடிஎம் கார்டு மூலம் 20 ஆயிரம் முதல் ரூ 50 ஆயிரம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். யுபிஐ வங்கிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, வங்கிகளில் கால் கடுக்க நிற்க வேண்டியதில்லை, விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தேவையில்லை. செயலி இருந்தால் போதும் உட்கார்ந்த இடத்திலிருந்தே பணத்தை பரிமாற்றம் செய்யலாம்.

போன் பே, கூகுள் பே
இதற்கு எந்த வரம்பும் இல்லை. அது போல் பொருட்களையும் இந்த போன்பே, கூகுள் பே, அமேசான் பே போன்ற ஆப்கள் கொண்டு வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற ஆப்களை பயன்படுத்தினால் பல வியாபார நிறுவனங்களும் கட்டணத்தில் சலுகைகளை கொடுக்கின்றன. இதை படித்தவர்கள்தான் என்றில்லை, யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் எளிதாக இருக்கும். ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதுமானது (அக்கவுண்டில் பணமும்தான்).

பானிபூரி கடை
பூக்கடை, தெருவோர காய்கறி, பானி பூரி கடை, டீக்கடைகளில் 10 ரூபாய், 20 ரூபாய்கெல்லாம் இந்த செயலி மூலமே பணத்தை செலுத்துவதால் இதற்கு நிறைய பயனாளிகள் உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு வரம்பு விதிக்கும் நடைமுறை விரைவில் அமலாகும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

80 சதவீதம் பங்கு
கூகுள் பேவும் போன் பேவும் இந்திய சந்தையில் 80 சதவீத பங்குகளை கொண்டுள்ளதாக தெரிகிறது. இதை 30 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா முன்மொழிந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துவிட்டால் பரிமாற்ற வரம்பு அமலுக்கு வரலாம்.

போன் பே
வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் இந்த மாற்றங்களை கொண்டுவரவும் முயற்சிக்கப்படுகிறது. எனவே ரிசர்வ் வங்கி தாமதித்தால் இந்த கால வரம்பு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி என்ற இந்த கால வரம்பை குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்காவது நீட்டிக்க வேண்டும் என போன் பே கோரிக்கை விடுத்துள்ளது. மற்ற செயலிகள் இதை 5 ஆண்டுகளாக நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications