ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த அதிரடி! வசமாய் சிக்கிய ரவுடி அப்பு! சென்னை போலீஸ் எடுத்த ஆக்‌ஷன்!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த அதிரடியாக ரவுடி அப்பு மீது குண்டர் சட்டம் பய்ந்துள்ளது. இதுவரை கைதான 27 பேரில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

armstrong police crime

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரைத் தவிர்த்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவத்தில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமனும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்தது.

இந்நிலையில் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ ஹரிஹரன். அஞ்சலை. பிரதீப். முகிலன். விஜயகுமார். விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில் குமார், கோபி ஆகிய 15 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து ஆற்காடு சுரேஷின் சகோதரரான பொன்னை பாலு , அருள், சந்தோஷ்,ராமு, திருமலை உள்ளிட்ட 10 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் முதல் குற்றவாளியாக பிரபல ரவுடி தாதா நாகேந்திரனும், இரண்டாவது குற்றவாளியாக ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவும், மூன்றாவதாக நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். நிலம் தொடர்பாக தகராறிலும், ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொலை அரங்கேறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த அதிரடியாக கடந்த மாதம் 21ஆம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட அப்பு மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பிறப்பித்திருக்கிறார். ஏற்கனவே 25 பேர் மீது குண்டச்சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது 26ஆவது நபராக அப்பு மீதும் குண்டாஸ் பாய்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்திலை காவல்துறையினர் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்படும் நிலையில் அவரை கைது செய்ய துபாய் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+