திமுக முக்கிய பிரமுகர் ஏற்பாட்டில் பாஜக எம்.எல்.ஏ. ஜப்பான் போனாரா?போட்டுக் கொடுத்த தமிழ்நாடு பாஜக!
சென்னை: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் என பேசப்படுகிற எம்.எல்.ஏ. ஒருவர், திமுகவுடன் மிக நெருக்கமாக இருக்கிறார்; அண்மையில் கூட ஜப்பான் சென்றிருந்தார்; அதுவும் திமுக பிரமுகர் ஏற்பாட்டில்தான் ஜப்பான் சென்றார் என ஆதாரங்களுடன் டெல்லி மேலிடத்தில் போட்டுக் கொடுத்துள்ளனராம் தமிழ்நாடு பாஜக பிரமுகர்கள்.
தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மீது நாலா பக்கமும் விமர்சனங்கள். கட்சிக்குள்ளேயே ஒவ்வொரு சீனியரும் ஒவ்வொரு வகையான புகார்கள்... கட்சிக்கு வெளியேயும் கடுமையான விமர்சனங்கள். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரது சென்னை வருகையின் போது விமான நிலைய வரவேற்பில் அண்ணாமலை இல்லாத அளவுக்கு டெல்லி மேலிட கோபம் என பல்வேறு தகவல்கள் நாளும் வலம் வருகின்றன.

அத்துடன் தமிழ்நாடு பாஜகவில் பிராமணர்கள் ஓரம்கட்டப்படுகின்றனர்; இதனால் பிராமணர்கள் தனிக்கட்சி தொடங்குவோம் என எஸ்வி சேகர் போன்றவர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். இதனால்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வரும் என அடித்து சொல்கின்றனர். அப்படி புதிய பாஜக தலைவராக யார் நியமிக்கப்படக் கூடும் என்கிற யூகங்களும் உலாக வருகின்றன.
தமிழ்நாடு பாஜகவுக்கான புதிய தலைவர் பதவிக்கு அடிபடும் பெயர்களில் அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரது பெயரும் உள்ளது. அவருக்குதான் அதிகமான வாய்ப்பு எனவும் தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைமை நம்புகிறது. அவருக்கான சோர்ஸ்கள் அதனை உறுதி செய்திருக்கின்றன. ஆகையால் அந்த பாஜக எம்.எல்.ஏ.வுக்கு தலைவர் பதவி கிடைக்கவிடாமல் செய்ய தமது அடிப்பொடிகள் மூலமாக டெல்லிக்கு மொட்டை கடுதாசிகள் போல இ மெயில் தகவல்கள் நாள்தோறும் அனுப்பப்படுகின்றனவாம்.
அதில் ஒன்றுதான், திமுகவின் அதிமுக்கிய பிரமுகர் ஏற்பாட்டில் அண்மையில் ஜப்பான் பயணம் மேற்கொண்டார் அந்த எம்.எல்.ஏ.; அதுவும் ஒரு வார காலம் குடும்பத்துடன் அந்த எம்.எல்.ஏ. பயணம் மேற்கொண்ட மொத்த செலவையும் அந்த திமுக பிரமுகரே பார்த்துக் கொண்டார்; ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவர் போலவே செயல்பட்டு வரும் அவர் பதவிக்கு வந்தால் திமுகவிடம் கட்சியை சரணடைய செய்துவிடுவார் என்றெல்லாம் அந்த புகார் பட்டியல் நீளுகிறதாம்.
இப்பவே கண்ணை கட்டுதே!


Click it and Unblock the Notifications
