அப்படி போடு! தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்.. அதிரடியாக அறிவித்த அரசு
சென்னை: தமிழகத்தில் மேலும் இரு நகரங்களில் கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்திலும் தொடர்ந்து தஞ்சை மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மற்றும் சேலத்திலும் மினி டைடல் பூங்க அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரைபட தயாரிப்பு, திட்ட மேலாண்மை பணிக்கு ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டரும் விடப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்குவதற்காக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தான் தற்போது கரூர் மற்றும் திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான வரைபட தயாரிப்பு, திட்ட மேலாண்மை பணிக்கான ஆலோசகர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரியிருக்கிறது தமிழக அரசு. தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை உருவாக்குவதற்காகவும், மாநிலம் முழுவதும் இதனை விரிவுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications