அரசு ஊழியர்களை விடுங்க.. பெண் பணியாளர்களுக்கு குட்நியூஸ்.. தமிழக தொழிலாளர் நலத்துறை விரைவில் அதிரடி
சென்னை: அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வரும் தொழிலாளர் நலத்துறை, மற்றொரு முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட போவதாக தெரிகிறது.
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையை பொறுத்தவரை, அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், ஊழியர்களின் நலனில் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறது.

மழைக்காலங்களிலும் சரி, இப்போது நடந்து கொண்டிருக்கும் கோடை காலத்திலும் சரி, வெப்ப நிலையை சமாளிக்கும் வகையிலான வசதிகள் செய்து கொடுப்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கி வருகிறது.
கழிப்பறை வசதி: இதனை தவிர, அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய குடிநீர் வசதி, குளியலறை வசதி, கழிப்பறை வசதி, காற்றோட்டமான சூழ்நிலை, சுழற்சி முறையில் ஓய்வு அடிப்படையிலான வேலை நேரம், இருக்கை வசதி போன்றவற்றை அனைத்து நிறுவனங்களும், தமிழ்நாடு கடைகள் நிறுவனச்சட்டத்தின் கீழ் செய்து தர வேண்டுமென்றும் அவ்வப்போது அறிவுறுத்தியவாறே உள்ளது.
அந்தவகையில், அனைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட அமலாக்க அலுவலர்களால் தொடர் கண்காணிப்பு ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.. இந்த அறிவுரையை ஏற்காமல் அலட்சியப் போக்கில் செயல்படும் நிறுவனங்கள் மீது எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் அதனுடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பலமுறை எச்சரித்திருக்கிறது.
பெண் பணியாளர்கள்: அந்தவரிசையில், பெண் பணியாளர்களின் நலனிலும் தொழிலாளர் நலத்துறை அக்கறையை அதிகப்படுத்தி வருகிறது.. அதனால்தான், குடும்ப பொறுப்பு அதிகரிக்கும் நேரங்களில், பெண் பணியாளர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்கலாம் என தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை செயலாளர் குமார் ஜெயந்த் யோசனை தெரிவித்துள்ளாராம்.
அதுமட்டுமல்ல, "இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழக பெண்கள் என்பதால் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதித்தால் அவர்களது முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
வரவேற்பு: கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வீட்டில் இருந்தே பணிபுரியும் முறை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இப்போது பெண் பணியாளர்களின் நலனில், ஜெயந்த் தெரிவித்திருக்கும் யோசனையானது, மிகுந்த கவனத்தையும், வரவேற்பையும் பெண்களிடம் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications