அரசு ஊழியர்கள், 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பண பலன் பெறலாம்! பட்ஜெட்டில் செம அறிவிப்பு
சென்னை: கொரோனா காலத்தில் தமிழக அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட சுமையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 நாட்கள் விடுப்பை சரண்டர் செய்து பணம் பெறும் நடைமுறை மீண்டும் கொண்டு வரப்படுகிறது என தமிழக பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
2025- 2026 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது அவர் 25 ஆண்டுகளுக்கான பட்ஜெட் என குறிப்பிட்டு பட்ஜெட்டை வாசித்தார்.

பட்ஜெட்டில் 3 மணி நேரமாக வாசித்து வரும் உரையில் தங்கம் தென்னரசு அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
அதில் கோவிட் பெருந்தொற்று பரவி இருந்த காலத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெருஞ்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு அலுவலருக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அவற்றைக் கனிவுடன் பரிசீலித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 01-04-2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு அலுவலர் நலன் காக்கும் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் ஒன்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.












Click it and Unblock the Notifications