Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசாணையை உடனே மாற்றுங்கள்.. தமிழக அரசின் முடிவுக்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில், சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியத்தில் அமர்த்தப்படுவார்கள். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கப்படும். பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என கூறியிருந்தனர். ஆனால் வழங்கவில்லை.. 110 விதிகளில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி கூறியுள்ளார்.

அங்கன்வாடி ஊழியர் ரூ.7,700 என்ற தொகுப்பூதியத்திலும், குறு அங்கன்வாடி ஊழியர் ரூ.5,700 என்ற தொகுப்பூதியத்திலும், அங்கன்வாடி உதவியாளர் ரூ.4,100 என்ற தொகுப் பூதியத்திலும் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து 12 மாத காலம் பணியினை முடித்தபிறகு, அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுகிறார்கள்.இதுதான் தமிழ்நாட்டில் தற்போது உள்ள நடைமுறையாகும்.

Government employees request Tamil Nadu government regarding Anganwadi workers salary and GO

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில், சத்துணவு ஊழியர்கள் காலமுறை ஊதியத்தில் அமர்த்தப்படுவார்கள். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கப்படும். பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என கூறியிருந்தனர். ஐந்தாண்டு காலம் நிதிநிலை இன்றுடன் நிறைவுபெற்றது.

போராட்டம்

ஆனால் நேற்று நடைபெற்ற சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை நிதிநிலை அறிக்கையில் சத்துணவு ஊழியர்களுக்கு எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. 110 விதிகளில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.


அங்கன்வாடி பணியாளர் வேலை

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் உள்பட 8,997 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி (திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்யலாம். அதனை நிரப்பி, வருகிற ஏப்ரல் 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

12ம் வகுப்பு தேர்ச்சி

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் 25 முதல் 38 வயது வரையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.


10ம் வகுப்பு தேர்ச்சி

அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 20 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வகுப்பினர் 20 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் 20 முதல் 43 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற அரசாணைக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் தமிழ்ச்செல்வி இன்று வெளியிட்ட அறிக்கையில், "3,592 அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் சத்துணவு திட்டத்தில் 8,997 சமையல் உதவியாளர்களை தொகுப்பூதியத்தில் தேர்வு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு தேர்ச்சி

அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பும், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 5-ம் வகுப்பும் படித்து இருக்க வேண்டும் என்று ஏற்கனவே இருந்த கல்வி தகுதியை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தமிழக அரசு மாற்றியுள்ளது. இதனால் பத்தாம் வகுப்புக்கு குறைவாகப் படித்தவர்கள் அங்கன்வாடி உதவியாளர்கள், சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்கள். மேலும், கல்வித் தகுதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்படாமல் தேர்வு செய்வது சட்டத்திற்கு புறம்பானதாகும்.

சமையலர் பதவி

6-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளில் இன்றும் இடைநிற்றல் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
தமிழகத்தில், அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையலர் பதவிகளில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் சேர்வதன் மூலம், அரசுப் பணியில் இணைந்து சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேற முடிந்தது.

கைம்பெண்கள்

கூடுதலாக விதவைகள், கைம்பெண்கள் மற்றும் இயற்கை பேரிடர், கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கன்வாடி உதவியாளர், சமையல் உதவியாளர் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. இனி எதிர்காலத்தில் இது போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி வழங்க இயலாது என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசாணையை உடனே மாற்றுங்கள்

எனவே, அங்கன்வாடி உதவியாளர், சத்துணவு சமையல் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பதை அரசாணையில் திருத்தம் செய்து "பழைய கல்வி தகுதி அடிப்படையில்" அங்கன்வாடி உதவியாளர் மற்றும் சமையல் உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+