சென்னையில் 52 வயதில் 'ராஜ யோசனை'.. ஒரே ஐடியாவில் 1.65 கோடி சம்பாத்தியம்.. இப்ப இருப்பது புழல் சிறை
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் பகவதியப்பன் என்பவர் செங்கல்சூளை உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மகன் பார்த்திபன் இன்ஜினியர் ஆவார். இவருக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இந்நிலையில் பார்த்திபன் உள்பட 18 பேருக்கு மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக போலி நியமன ஆணை ஏமாற்றியுள்ளாராம் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஹரிஹரகுமார். இதில் 1.65 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளாராம் ஹரிஹரகுமார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த 52 வயதாகும் பகவதியப்பன் என்பவர் தொழில் அதிபர் ஆவார். இவர் செங்கல்சூளை உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மகன் பார்த்திபன் என்பவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். இவருக்கு அரசாங்க வேலை பெற வேண்டும் என்று பகவதியப்பன் ஆசைப்பட்டுள்ளார்.

அப்போது சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஹரிஹரகுமார் (52) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் தனக்கு மத்திய மந்திரிகளையும், மத்திய அரசு அதிகாரிகளையும் நன்கு தெரியும் என்றும், பார்த்திபனுக்கு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தில் முக்கிய வேலை பெற்றுத்தருவதாக ஆசை காட்டினார்.மேலும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என்று உறுதி கூறினாராம்.
இதையடுத்து ஹரிகுமாரின் ஆசை வார்த்தைகளை நம்பி, தனது மகன் உள்பட 18 பேருக்கு மத்திய அரசு வேலைக்காக ரூ.1.65 கோடியை ஹரிஹரகுமாரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ஹரிஹரகுமார் மத்திய அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். வேலை கிடைத்த மகிழ்ச்சியில் பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்ட 18 பேரும், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்றனர். அங்கு அவர்களுக்கு ட்விஸ்ட் காத்திருந்தது.
அதாவது ஹரிஹரகுமார் கொடுத்தது போலி பணிநியமன ஆணை என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதன்பின்பே ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர். இதனிடையே ரூ.1.65 கோடியையும் சுருட்டி கொண்டு ஹரிஹரகுமார் எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதனையடுத்து வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்தது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கன்னியாகுமரி தொழில் அதிபர் பகவதியப்பன் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சகுந்தலா இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். மேலும் தலைமறைவாக இருந்த ஹரிஹரகுமார் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications