இறங்கி வராத மத்திய அரசு.. ஜனவரி முதல் அனைத்து வாகனங்களிலும்.. ஆண்டி லாக் பிரேக்கிங் கட்டாயம்!
சென்னை: மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கோரிக்கைகள் வைத்தன.
ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது . இந்த விதிமுறை எஞ்சின் திறன் பாராமல் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும்.

ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்
மேலும், இருசக்கர வாகனங்களை வாங்கும் போது, இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க இரண்டு தரமான தலைக்கவசங்களை (ஹெல்மெட்) உற்பத்தியாளர்கள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, "2026 ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து மாடல் L2 வகை வாகனங்களும் IS14664:2010 தரநிலைக்கு இணங்க ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்
ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்பது திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் பூட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இது வாகனங்கள் சறுக்குவதையும், விபத்துக்குள்ளாவதையும் கணிசமாகக் குறைக்கிறது.
அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த 1,51,997 சாலை விபத்துக்களில் கிட்டத்தட்ட 20% இருசக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விதிமுறைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆட்டோமொபைல் விதிகள்
அதேபோல் சாலை விதிமீறல்களை தடுக்கும் விதமாக ஓட்டுநர் உரிமங்களுக்கு 'எதிர்மறை புள்ளிகள் முறையை' அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நெகட்டிவ் பாயிண்ட்ஸ் முறை.
பல நெகட்டிவ்புள்ளிகளைப் பெறும் ஓட்டுநர்களின் உரிமை இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படும். அதாவது நீங்கள் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள், சீட் பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு நெகட்டிவ் புள்ளி வழங்கப்படும்.
இப்படி உங்கள் தவறுகளுக்கு ஏற்ப உங்களுக்கு நெகட்டிவ் புள்ளிகள் வழங்கப்படும். இந்த நெகட்டிவ் புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட மதிப்பை தாண்டும் போது உங்கள் லைசன்ஸ் இடைக்காலமாக நீக்கம் செய்யப்படும். விதி மீறல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.
விதிகள் சொல்வது என்ன?
ஏற்கனவே நாடு முழுக்க விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபத்தங்களை விதிக்க புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. இது மத்திய அரசின் பரிந்துரை என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் இந்த அபாரதங்கள் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
1. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்
முன்பு குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் ₹1,000 முதல் ₹1,500 வரை இருந்தது. புதிய விதிகளின்படி, குற்றவாளிகளுக்கு ₹10,000 அபராதம் மற்றும்/அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு ₹15,000 அபராதம் மற்றும்/அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால்
அபராதம் ₹100ல் இருந்து ₹1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் மூன்று மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும்.
3. சீட் பெல்ட் அணியாதது
சீட் பெல்ட்டைக் அணிய தவறினால் இனி ₹1,000 அபராதம் விதிக்கப்படும், இது முந்தைய ₹100ஐ விட பத்து மடங்கு அதிகமாகும்.
4. வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது
வாகனம் ஓட்டும் போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் இதற்கு முன்பு ₹500 அபராதம் விதிக்கப்பட்டது, இனி அபராதம் ₹5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுங்களுக்கு நெகட்டிவ் பாயிண்ட்ஸ் வழங்கப்படும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications