சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய கல்விக்கொள்கை பற்றி முதல்வரிடம் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கூறுவோம் - செங்கோட்டையன்

புதிய கல்விக்கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துள்ளது. தமிழக அரசின் நிலைப்பாடு பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

புதிய கல்வி கொள்கையின் படி கல்வி நிறுவனங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் புதிய கல்வி கொள்கையில், பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் கைத்தொழில் கட்டாயம் கற்றுத்தரப்படும் இளங்கலை 3-4ஆண்டுகள் நடத்தப்படும். முதுகலை 1-2 ஆண்டுகள் நடத்தப்படும் இண்டகிரெட் இளங்கலை, முதுகலை இரண்டும் 5 ஆண்டுகள் அனுமதிக்கப்படும்.

Government of Tamil Nadus position on new education policy 2020

உயர் கல்வி நிலையங்களில் தன்னாட்சி உரிமம் அளிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளில் சுயாட்சி முறை ஒழிக்கப்படும் உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும் இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1,பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது - எஸ்எம்எஸ்சில் மதிப்பெண் பட்டியல் பிளஸ் 1,பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது - எஸ்எம்எஸ்சில் மதிப்பெண் பட்டியல்

இந்த நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் புதிய கல்விக்கொள்கை பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், புதிய கல்விக்கொள்கை பற்றி முதல்வருடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் கருத்து தெரிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

English summary
Education Minister K A Sengottayan said the central government would be consulted on the new education policy in consultation with the chief minister of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X