கமல்ஹாசனை கர்நாடகத்திற்குள் விடக்கூடாது.. படத்தையும் திரையிடக்கூடாது.. கொதித்தெழுந்த கர்நாடக பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் கூறுகிறார். அவருக்கு பைத்தியம் தான் பிடித்துவிட்டது. அவர் ஒரு நகர நக்சலைட்டு போல தெரிகிறது. கன்னடர்கள் அனைவரும் கமல்ஹாசனை புறக்கணிக்க வேண்டும். கர்நாடகத்திற்குள் கமல்ஹாசனை அனுமதிக்கக் கூடாது. கன்னடத்திற்கு துரோகம் இழைத்த அவரது படங்களை கர்நாடகத்தில் திரையிடுவதற்கு அனுமதி அளிக்க கூடாது என்று கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார். தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று தக் லைஃப் பட விழாவில் கமல்ஹாசன் கூறியதற்கு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகின் முதன்மையான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசனின் நடிப்பில் தக் லைஃப் படம் உருவாகியுள்ளது. 'நாயகன்' படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் 'தக் லைப்' படம் உருவாகி இருக்கிறது.

Thug Life Kamal Haasan Kannada

வருகிற ஜூன் 5- ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதன் பட விழாவில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஏஆர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார். அப்போது கமல்ஹாசன் பேசும்போது, ''ராஜ்குமாருடைய குடும்பம் கன்னடத்தில் இருக்கும் எனது குடும்பம்.

தமிழில் இருந்து பிறந்தது கன்னடம். அதனால் தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார்'' என்று பேசினார். நடிகர் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசனின் இந்த பேச்சை கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக போராட்டம் செய்தனர். கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக முதல்வர் உள்பட அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே என் கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறினார். அவர் கூறுகையில், அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. கன்னடமொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் கூறினார். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனை கர்நாடகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக் கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அசோக் கூறியதாவது:-

"கமல்ஹாசன் பேசியதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதனை நாங்கள் வரவேற்கிறோம். தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் கூறுகிறார். அவருக்கு பைத்தியம் தான் பிடித்துவிட்டது. கன்னட சினிமாவில் இருக்கின்ற தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தாங்க.. அவர் ஒரு நகர நக்சலைட்டு போல தெரிகிறது.

கன்னடர்கள் அனைவரும் கமல்ஹாசனை புறக்கணிக்க வேண்டும். கர்நாடகத்திற்குள் கமல்ஹாசனை அனுமதிக்கக் கூடாது. கன்னடத்திற்கு துரோகம் இழைத்த அவரது படங்களை கர்நாடகத்தில் திரையிடுவதற்கு அனுமதி அளிக்க கூடாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+