அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.. தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை.. மது விற்றால் ஆக்ஷன்
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இன்று கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.. இன்று அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது; மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மாவட்டங்களின் ஆட்சியர்கள் கண்டிப்புடன் அறிவித்துள்ளனர். அதன்படி மதுக்கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மதுவிலக்கு என்பது கனவாகவே கலைந்து, காற்றில் கரைந்து வருகிறது.. மாறாக, டாஸ்மாக்குகள் மூலம், தமிழக அரசுக்கு ஏகப்பட்ட வருவாய் கிடைத்து வருகிறது..

அதாவது, அரசுக்கு வரும் மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருகிறதாம்..
அரசுக்கு கிடைக்கும் வருமானம்
தமிழகத்தில் கிட்டத்துட்ட 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், இவைகள் மூலம் வருடத்துக்கு ரூ.45000 கோடி வரை வருமானம் கிடைப்பதாகவும், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று நீதிமன்றமும் அறிவுறுத்தியபடி உள்ளது. சமீபத்தில்கூட வழக்கு ஒன்றில் ஹைகோர்ட் தன்னுடைய கருத்தை கூறியிருந்தது.
படிப்படியாக டாஸ்மாக் மூடல்
அதில், "நீதிமன்றம் மதுக்கடைகளை பொதுமக்களுக்கு இதுபோல இடையூறு ஏற்படாமல் பார்ப்பது மாநிலத்தின் கடமை.. இந்திய அரசமைப்பு சட்டப்படி, ஊட்டச்சத்து தரத்தையும், வாழ்வின் தரத்தையும் உயர்த்துவதும், சுகாதாரத்தை மேம்படுத்துவதும் மாநிலத்தின் முதன்மையான கடமையாக கருத வேண்டும்..
ஒருபக்கம் அதிக மருத்துவமனைகளை நிறுவி, இன்னொருபுறம் டாஸ்மாக் கடைகளையும் மக்கள் நல அரசு நிறுவுவது முரண்பாடாக உள்ளது. நம்முடைய அரசியலமைப்போடு இது ஒத்துப்போவதில்லை.
அதனால், பொது சுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முழுமனதுடன் மக்கள் நல அரசு பாடுபட வேண்டும். மதுவிலக்கை படிப்படியாக மெதுவாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தியிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது
காந்தி ஜெயந்தி
இந்நிலையில், காந்தி ஜெயந்தி வருவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடுப்படுவது வழக்கமாகும்..
அந்தவகையில், இன்று 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மூடப்பட்டிருக்கிறது.. இதுகுறித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுமே முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.. இதில், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் இருப்பதாவது:
இன்று அரசு டாஸ்மாக் மூடல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று அக்டோபர் 2-ந்தேதி அதாவது வியாழக்கிழமை தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 251எல் (ஏ) ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்.எல்.1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட வேண்டும்.
மேலும், அதனை சார்ந்த பார்கள், FL 2 லைசென்ஸ் உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் FL 2 (A), FL 3 (AA) முதல் FL 11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள், மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இதில் தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரி கடைகள்
அதேபோல கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications