தங்கத்தை மிஞ்சும் தக்காளி.. வெலவெலக்க வைக்கும் வெங்காயம்! விலையால் தலை சுத்துதா? சூப்பர் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வரும் நிலையில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை 120 ரூபாயை தாண்டி உள்ளது. மேலும் வெங்காயத்தின் விலை 100 ரூபாயை எட்டி உள்ள நிலையில் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மழை என மாறி மாறி காலநிலை வருகிறது. இதன் காரணமாக தக்காளி வெங்காயம் உள்ளிட்டவற்றின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட மாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி அந்த மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு தக்காளி வரப்பு வெகுவாக குறைந்தது.
மேலும் தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தக்காளி ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து இருக்கும். இந்த நிலையில் தற்போது கனமழை காரணமாக 50 முதல் 60 லாரிகளாக இருந்த தக்காளி வரத்து 30 லாரிகளாக குறைந்துள்ளது.
கடந்த மாதம் வெறும் 40 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த தக்காளி, கடந்த ஒரு வாரமாகவே விலை உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெறும் 55 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாயை தாண்டி உள்ளது. தற்போதைய சூழலில் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக அதனை வாங்கிச் சென்று வெளியில் சில்லறை விலையில் விற்கும் சிறு வியாபாரிகள் கூடுதல் லாபம் வைத்து 110 முதல் 120 ரூபாய் வரை விற்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேபோல், சென்ற மாதம் 20 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம் தற்போது 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே தக்காளி விலை 100 கடந்துள்ள நிலையில், வெங்காயமும் விலை உயர வாய்ப்புள்ளதாக மக்கள் கவலையடைந்துள்ளனர். பெரிய வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளில் வெளிச்சந்தையில் பெரிய வெங்காயம் தக்காளி ஆகியவற்றின் விலை உயர்ந்த நிலையில் தமிழக அரசின் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. தற்போதும் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.
தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் தக்காளி 60 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு கிலோ வரை விற்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் வெங்காயம் பதுக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications