அரசுக்கு நிதியுதவி குவிகிறது.. தமிழகத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி கொரோனா நிதி!
சென்னை: தமிழகத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ரூ.1 கோடி கொரோனா நிதியை வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனவை கருத்தில் கொண்டு தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கினார்.
அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்துக்கு ரூ.1 கோடி கொரோனா நிதியை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரும் ஸ்டாலினுடன் இருந்தனர்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications