ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு! ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்கனும்! ஆளுநர் கொடுத்த அழுத்தம்!
சென்னை: சட்டமன்ற தேர்தலில் பெரிய கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க முடியாமல் விஜய் திணறி வருகிறார். இந்நிலையில், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்கிறார். ஆனால், பதவியேற்புக்கு முன்னர் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இந்நிலையில், நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் விஜய். ஆனால், ஆளுநர் விஜய்யை அழைக்கவில்லை. எனவே இன்று காலை 11 மணியளவில் மீண்டும் ஆளுநரை சந்தித்திருந்தார் விஜய். இந்த சந்திப்பில் ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தனிப்பெரும் கட்சியை அழைத்து ஆட்சி அமைக்க சொல்ல வேண்டும் என்பது மரபு. அந்த வகையில் விஜய் நேற்று ஆளுநரை சந்தித்து உரிமை கோரியிருந்தார். ஆனால், ஆளுநர் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தார். நேரம் கடந்து கொண்டிருந்த நிலையில், இன்று மீண்டு ஆளுநரை விஜய் சந்திருந்தார்.
இந்த சந்திப்பில், விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். எனவே விஜய்க்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
பெரும்பான்மை இருந்தால்தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் 107 எம்எல்ஏக்களையும், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களையும் வைத்திருக்கிறார். 118 இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும்.
ஆனால், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் இத குறித்து தெளிவாக விளக்கியிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம்தான் என்று. எனவே இந்த பாயிண்ட்டை வைத்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க இன்று ஆளுநரை விஜய் சந்திக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மட்டுமல்லாது, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் இன்று கேரளாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதால், அவர் கிளம்புவதற்குள் இறுதிப் பட்டியலை அளித்து, அழைப்புக்கான உத்தரவைப் பெற விஜய் முயற்சிக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. மே 8 அல்லது 9-ஆம் தேதிகளில் பதவியேற்கத் திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை இன்று பெறுவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்றும் பலரும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் 30 நிமிடங்களுக்கும் மேல் நடந்த இந்த சந்திப்பில், விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications