நடிகர் ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவியா? சகோதரர் சத்யநாராயணா அளித்த பதில் இதுதான்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறிய அவரது சகோதரர் சத்யநாராயணா, ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் பதிலளித்தார்.
அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இந்த ரேசில் முந்திய எடப்பாடி பழனிசாமி கட்சியை முழுமையாக தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் நடத்திய சட்ட போராட்டங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

ஓபிஎஸ் மலை போல் நம்பிக் கொண்டு இருந்த பாஜகவும் அவரை கண்டு கொள்ளாமல் விட்டது. இதனால், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள ஓபிஎஸ் தற்போது மக்கள் மன்றமே தீர்வு என்ற முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. இதற்காக, மாவட்ட வாரியாக தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கும் விதமாக பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஓ பன்னீர் செல்வம் இன்று காஞ்சிபுரத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.
இதற்கு மத்தியில் நேற்று நடிகர் ரஜினிகாந்தை ஓபிஎஸ் சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என கூறப்பட்டாலும் இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்தும் இருவரும் பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். ரஜினிகாந்த் எப்போதுமே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கமானவராகே அறியப்படும் நிலையில், சரியாக தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஓபிஎஸ் , ரஜினிகாந்தை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா ராவ்விடம் ஓபிஎஸ் - ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து சத்யநாராயணா ராவ் கூறியதாவது:- ஓபிஎஸ் - ரஜினிகாந்த் சந்திப்பில் அரசியல் இல்லை என்று கூறினார். மேலும், ரஜினிகாந்திற்கு ஆளுநர் பதவி எதுவும் கிடைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த சத்யநாரயணா , "அது இறைவன் கையில்.. ரஜினிக்கு அதில் விருப்பம் இல்லை. வந்தால் வேண்டாம் என்பதற்கு இல்லை.. வரட்டும்" என்றார். தொடர்ந்து ரஜினிக்கு அரசியலுக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications