அட.. இது லிஸ்டுலேயே இல்லையே.. "அந்த" முக்கிய பிரமுகரை சந்திக்கும் ஆளுநர் ரவி.. என்னவா இருக்கும்?
- தமிழ்நாடு அரசுக்கும் - ஆளுநருக்கும் இடையிலான மோதலும் கொஞ்சம் ஓய்ந்து உள்ளது.
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இன்று முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர். என் ரவிக்கும் இந்த வருட தொடக்கத்தில் கடுமையான மோதல் நிலவி வந்தது. ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆளுநர் சொந்த கருத்துக்களை பேசுவதாகவும், அரசியல்வாதி போல பேசுவதாகவும் இந்த கடிதத்தில் புகார் வைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக அவரின் தமிழ்நாடு - தமிழகம் வார்த்தை பிரயோகம் தொடர்பான விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானது.

சர்ச்சைகள்
இந்த சர்ச்சைகளுக்கு ஆளுநர் விளக்கம் அளித்த நிலையில் அரசுக்கும் - ஆளுநருக்கும் இடையிலான மோதலும் கொஞ்சம் ஓய்ந்து உள்ளது. இந்த நிலையில்தான் பல்வேறு ஆளுமைகளை சந்தித்து விவாதிக்கும் ரவி, அரசியல் பிரபலங்களையும் அறிவுஜூவிகளையும் சந்தித்து விவாதிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். வரிசையாக பல்வேறு தலைவர்களை ஆளுநர் ஆர். என் ரவி சந்தித்து வருகிறார். முக்கியமாக பல துறைகளை சேர்ந்தவர்கள், அரசியல் ரீதியாக வாய்ஸ் கொண்டவர்கள், பல்வேறு விதமான கருத்துக்களை கொண்டவர்களை ஆளுநர் ஆர். என் ரவி சந்தித்து வருகிறார்.

சந்திப்பு
இந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனை ராஜ்பவனுக்கு அழைத்திருக்கிறார் ரவி. புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் சமீபத்தில் சொன்னார். ஒரு பெரிய போர்க்களத்தில் இருப்பவர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார் என்று சொன்னால் அவர் தப்பித்துப் போயிருக்க வேண்டும் என்பதுதான் பொருள். எந்த மார்க்கமாக போனார்? எப்படி போனார்? இப்போது எங்கு இருக்கிறார்? என்ற கேள்விகள் எல்லாம் எழுப்புவது நியாயம். அதற்குரிய பதிலை பிரபாகரன் சொல்ல வேண்டும் அல்லது அவருடன் இருந்த மூத்த தளபதிகள் சொல்ல வேண்டும். அவர்களைத் தவிர அந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் வெளிவந்த பிற்பாடு அந்தச் செய்தியை வெளியிடுவார்கள்

உண்மை என்ன?
பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். பொதுவெளியில் தோன்றுவதை விடுதலைப் புலிகளின் தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். எப்போது தோன்ற வேண்டும்? அதனை எப்போது சொல்ல வேண்டும்? என்பதை அவர் தான் முடிவு செய்ய முடியும், என்று கூறினார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது. பழ நெடுமாறனின் இந்த கருத்தை வழி மொழிந்தவர் ராதாகிருஷ்ணன். இந்த நிலையில், கவர்னர் ரவி - ராதாகிருஷ்ணன் சந்திப்பை கவனமாக கவனிக்கிறது மாநில உளவுத்துறை. இப்படி ஒரு கருத்தை சொன்னவருடன் திடீரென ஆர். என் ரவி சந்திப்பு நடத்துவது கவனம் பெற்றுள்ளது.

யார் இவர்?
கே.எஸ். இராதாகிருஷ்ணன் இதற்கு முன் திமுகவில் இருந்தவர். திமுகவில் இவர் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் நிர்வாகியாக இருந்தவர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின் கட்சியில் இவர் சேர்க்கப்படவே இல்லை. திமுக தலைமைக்கு எதிராக பேசியதாகவும், கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டு இவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் ஆளுநர் ஆர். என் ரவியை சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications