“சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர்கள் நினைக்கிறார்கள்..” ஆளுநர் ரவி விமர்சனம்
சென்னை: வெளியூர்களிலிருந்து சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர்கள் கருதுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இருக்கிறது என்று பேசியிருந்த ஆளுநர், தற்போது சட்டென மாற்றி பேசி விமர்சித்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூரை ஒட்டியுள்ள பொடவூர் பகுதியில் அகில இந்திய மகளிர் சங்கத்தின் 93ம் ஆண்டு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த ஆளுநர் ரவி, பெண்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

"சென்னை பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும். பட்டமளிப்பு விழாக்களில் என்னை சந்தித்து பேசும் மாணவிகள், சென்னை பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்று தங்கள் பெற்றோர்கள் கூறுவதாகவும், எனவே சென்னைக்கு அனுப்ப தயங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். எனவே சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக கடந்த 21ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதாக கூறியிருந்தார். அதாவது, "தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக இருப்பதால், வடகிழக்கு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெற்றோர்கள் தங்கள் மகள்களை கல்வி பயில தமிழகத்திற்கு அனுப்புகின்றனர். வெளிமாநில மாணவிகளுக்கு, தமிழ்நாட்டின் விருந்தோம்பல் சிறப்பானதாக இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இப்படி பேசிய ஆளுநர், அடுத்த ஒரு வாரத்தில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications