இங்கே முதல்வர் பேசி முடிச்சதும்.. அங்கே ஆளுநர் மாளிகை போட்ட போட்டோ! ரவி அருகே யாருன்னு பார்த்தீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ரவி ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் மாநாடு நடத்தி வருகிறார். இதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆளும் திமுக அரசு இதற்கான திட்டத்தில் இருந்த நிலையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இம்மசோதாவுக்கு சட்டசபையில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் மசோதாவை தாக்கல் செய்ததற்கான காரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார்.

ஆளுநர் கூட்டம்

ஆளுநர் கூட்டம்

இங்கே முதல்வர் ஸ்டாலின் பேசி முடித்து, மசோதா மீதான வாக்கெடுப்பு உடனே நடத்தப்பட்டது. சில நிமிடங்களில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில்தான் ஊட்டியில் துணை வேந்தர்கள் ஆளுநருடன் சந்திக்கும் மீட்டிங்கும் நடைபெற்றது. இங்கே சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்ட அதே நேரத்தில்தான் ஊட்டியில் துணை வேந்தர்களுக்கான மாநாட்டில் பல்வேறு துணை வேந்தர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை செய்து கொண்டு இருந்தார்.

துணை வேந்தர் ஆளுநர்

துணை வேந்தர் ஆளுநர்

பல்கலைக்கழகங்கள் எப்படி செயல்படுகிறது, கொரோனாவிற்கு பின்பான மாணவர் சேர்க்கை, பாடத்திட்ட விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆளுநர் ஆலோசனை செய்து இருக்கிறார். இந்த நிகழ்வில் மாநில அரசின் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் துணை வேந்தர்கள், அதிகாரிகள் உட்பட 33 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் கூட்டம்

இரண்டு நாட்கள் கூட்டம்

மொத்தம் 2 நாட்கள் இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதனால் பல்வேறு விவகாரங்கள் இதில் ஆலோசனை செய்யப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்ட அதே வேளையில் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து முக்கியமான புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டது. ஆளுநர் ரவி துணை வேந்தர்களுடன் இருக்கும் புகைப்படம் ஆகும் இது.

ஸ்ரீதர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு

கூட்டத்தில் கலந்து கொண்ட 33 பேருடன் ஆளுநர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமே ஆகும் இது. இந்த புகைப்படத்தில் ஸோஹோ நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு இடம்பெற்றுள்ளார். ஆம் ஆளுநருக்கு அடுத்தபடியான இடம் ஸ்ரீதர் வேம்புவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்த 2 நாட்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். மாணவர்களின் கல்வி திறன், கல்வி முறை பற்றி பல இடங்களில், பல மேடைகளில் ஸ்ரீதர் வேம்பு பேசி இருக்கிறார்.

ஸ்ரீதர் வேம்பு ஏன்

ஸ்ரீதர் வேம்பு ஏன்

இந்த நிலையில்தான் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டால் ஸ்ரீதர் வேம்பு இடம்பெற்று இருப்பது கவனம் பெற்றுள்ளது. அதிலும் அவருக்கு ஆளுநருக்கு அருகிலேயே இடம் கொடுத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இரண்டு நாட்கள் நடக்கும் நிகழ்வில் யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கலந்து கொள்கிறார். 20 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பல்வேறு பேராசியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+