"திமிரான பேச்சு.. எதுவும் தெரியாமல் தனி உலகத்தில் வாழும் ஆளுநர் ரவி.." நீட் விலக்கு! உதயநிதி ஆவேசம்
சென்னை: நீட் தேர்வு காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இப்போது மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பணம் அதிகம் இருப்போரால் மட்டும் நீட் தேர்வுக்குத் தனியாக கோச்சிங் சென்று பாஸ் ஆகும் சூழலே இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. இது தொடர்பான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஒப்புதலுக்காக அது குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்பட்டுள்ளது.
தற்கொலை: மறுபுறம் தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன்,19 என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மகன் இறந்த துக்கத்தில் அவரது தந்தையும் தற்கொலையால் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்தும் நீட் விலக்கு குறித்தும் அமைச்சர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் அறிவிப்புடன் நிற்கிறது. வெறும் ஒரு செங்கல்லை மட்டும் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். சிலர் மருத்துவமனையே கட்டியாச்சு. பலர் பயனடைவதாகவும் பொய்யான கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உதயநிதி: நீட் தேர்வு காரணமாக மற்றொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அது வருந்தத்தக்க ஒரு விஷயம். மாணவர் ஜெகதீஸ்வரன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இன்று அவரது தந்தை செல்வசேகர் உயிரிழந்துள்ளார். மத்திய பாஜக அரசு இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இரண்டு முறை இது குறித்து தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.
திமிர் பேச்சு: இங்குள்ள ஆளுநர் தமிழக மக்களின் மனநிலை தெரியாமல் தனி உலகத்தில் இருக்கிறார். சமீபத்தில் மாணவரின் தந்தை ஒருவர் கேட்டதற்கு. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என அவர் திமிராகப் பேசியுள்ளார். இதில் இருந்தே அவரது அறியாமை வெளிப்படுகிறது. திமுக இந்த விவகாரத்தில் தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்தும். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்.

ஏற்கனவே காங்கிரஸின் ராகுல் காந்தி நீட் தேர்வு குறித்து மாநிலங்களின் கருத்துக் கேட்டு முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். எனவே, விரைவில் நல்ல வழி பிறக்கும். மாணவர்கள் சற்று பொறுமையாக இருங்கள். முதல்வர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். தவறான முடிவை யாரும் எடுக்க வேண்டாம். நீட் தேர்வு ரத்தான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
சட்ட போராட்டம்: பிரதமரைப் பார்க்கும் போதெல்லாம் இது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த முறை டெல்லி சென்று பார்க்கும் போது நானும் இதோ கோரிக்கையைப் பிரதமர் மோடியிடம் வைத்தேன். நீட் விலக்கிற்காக அரசு முழுமையாகப் பாடுபடும்.
நீட் தேர்வு குறித்து அறியாமையில் ஆளுநர் பேசி வருகிறார். தமிழக மக்களின் மனநிலை குறித்துப் புரிந்து கொள்ளாமல் ஆளுநர் பேசி வருகிறார். மாணவரின் இறப்பைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசுகின்றனர்" என்றார்.. சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெற்றோர் நீட் விலக்கு குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு ஆளுநர் ரவி, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications