வலையில் சிக்கிக்கொண்டார் ஆளுநர் ரவி.. இனி போக வழியே இல்லை.. சீக்ரெட்டை உடைத்த தலை.. ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாடு அரசு திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களில் ஆளுநர் ரவி கையெழுத்து போடுவதை தவிர வேறு வழியே கிடையாது. ஆளுநர் ரவி வலையில் சிக்கிக்கொண்டார். நன்றாக வலையில் சிக்கிக்கொண்டார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?: இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையான கண்டனங்களை ஆளுநர் ரவிக்கு எதிராக வைத்தார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
காரணம் ஏதும் கூறாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை, மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பியதால் அவற்றுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். காரணம் ஏதும் கூறாததால், மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநரால் அனுப்பி வைக்க முடியாது என்று கூறியது.
பேட்டி: உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ஒவ்வொரு மாநிலமும் ஆளுநர்கள் மூலம் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நினைக்கிறார்கள். இதனால்தான் கோர்ட் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பி இருந்தார். அந்த மசோதாக்களை மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பி விட்டது. இந்த மசோதாக்கள் தற்போது நிதி மசோதாக்களுக்கு இணையானவை.
இதை ஆளுநர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஆளுநர் இதில் கையெழுத்து போட்டே ஆக வேண்டும் . இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இப்போது பரபரப்பாக கருத்துக்களை சொல்லலாம். ஆனால் அதெல்லாம் தீர்ப்பில் வருமா என்பது சந்தேகம்தான். அவருக்கு கண்டிப்பாக கால நிர்ணயம் நிர்ணயிக்கப்படாது. இது எல்லாம் தீர்ப்பில் இருக்க வாய்ப்பு குறைவு. அதற்கு முன் ஆளுநர் ரவி 10 மசோதாக்களில் 7-8 மசோதாக்களை ஒப்புக்கொண்டு விடுவார். அது சட்டமாகிவிடும். சில மசோதாக்களை கையில் வைத்து இருப்பார்.
என்ன சொன்னார்?: தமிழ்நாடு அரசும் கோர்ட்டில் வேறு கோரிக்கையை வைக்காது. மத்திய அரசும் இதை பெரிதாக கண்டுகொள்ளாது. அதனால்தான் ஆளுநரை ஆதரித்து மத்திய அரசு பெரிதாக வாதம் வைக்காது. கால நிர்ணயம் கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட கூடாது. அவரின் பதவிக்கு உள்ள மரியாதை அது. அவருக்கு சட்டத்தின் இம்யூனிட்டி உள்ளது. அதில் நடவடிக்கை எடுக்க முடியாது. அதனால் அவருக்கு கண்டிப்பாக கால நிர்ணயம் நிர்ணயிக்கப்படாது.
ஆளுநர் காரணத்தை சொல்லாமல் மசோதாக்களை திருப்பி அனுப்பினார் . இங்குதான் அவர் தவறு செய்தார். காரணத்தை சொல்லாத காரணத்தால்.. அது பண மசோதா போல மாறிவிட்டது,. பண மசோதா போல ஆகிவிட்டதால்.. ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இனி இந்த மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடுவதை தவிர வேறு வழியே கிடையாது. ஆளுநர் ரவி வலையில் சிக்கிக்கொண்டார். நன்றாக வலையில் சிக்கிக்கொண்டார்., என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications