தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ல் ராஜ்பவன் முற்றுகை: சிபிஐ முத்தரசன்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ந் தேதி ராஜ்பவன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினாலும் தீவிர இந்துத்துவா கருத்துகளைப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். திருக்குறளை ஆன்மீக குரலாக, இந்துத்துவத்தின் குரலாக சுட்டிக்காட்டி பேசுகிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் தொடர்ச்சியான இந்த கருத்துகளை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை. அண்மையில் திமுக எம்.பிக்களிடையே கையெழுத்து பெற்று, ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் மனு கொடுத்திருந்தது.
இந்நிலையில் ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ந் தேதி சென்னை ராஜ்பவன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் அறிவித்திருக்கிறார். இந்தப் போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications