தனிவிமானத்தில் பறந்த ஆளுநர் ரவி.. ஊட்டியில் தனி மாநாடு.. 7 நாள் கேம்ப்.. தகிக்கும் திமுக.. பின்னணி
சென்னை: ஊட்டியில் நடக்க உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று ஆளுநர் ரவி நீலகிரி சென்றார். இவருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ளது. இன்றும், நாளையும் இந்த மாநாடு ஊட்டியில் நடக்கிறது.
இதை ஆளுநர் ரவி தொடங்கி வைக்க இருக்கிறார். அங்கு அவர் 7 நாட்கள் தங்க உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டிற்கு பலத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் நீலகிரிக்கு சென்றார். கோவையில் இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து அவர் கார் மூலம் நீலகிரி செல்லும் வழியில் பல இடங்களில் பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். மொத்தம் 2 ஆயிரம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

என்ன தலைப்பு?
புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் இந்த மாநாடு நடக்கிறது. இதில் ஸோகோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு கலந்து கொள்கிறார். அதேபோல் யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் கலந்து கொள்கிறார். 20 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். பல்வேறு பேராசியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். ஆளுநர் ரவியின் மாநாடு பிளான் திமுக தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு
இந்த நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நடப்பதும், அதை ஆளுநர் தொடங்கி வைப்பதும் திமுக தரப்பில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்தான் வேந்தர். துணை வேந்தர்களை தற்போது ஆளுநர்தான் நியமித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில், துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமனம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

திமுக கொதிப்பு
இன்றே இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆளுநர் ரவிக்கும், தமிழ்நாட்டில் ஆளும் தரப்பிற்கும் இடையில் நீட் விவகாரம் தொடங்கி பல விஷயங்களில் மோதல் உள்ளது. தற்போது இந்த துணை வேந்தர் விவகாரத்திலும் மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகிக்கும் பொறுப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications