மீண்டும் புயல்.. தமிழக அரசின் உத்தரவை வாபஸ் பெற ஆளுநர் ரவி ஆணை! வெடிக்கும் துணைவேந்தர் விவகாரம்!
சென்னை: மீண்டும் தமிழ்நாடு அரசுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மோதல் போக்கை தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமித்த அரசாணைய திரும்பப் பெற ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு அமைத்த தேடுதல் குழு அறிவிப்பை திரும்பப் பெற ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதியையும் தேடுதல் குழுவில் சேர்த்து ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த ஆணையிட்டுள்ளார்.

துணைவேந்தரை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்த தேடுதல் குழு விதிகளுக்குப் புறம்பானது. நான் அமைத்துள்ள குழுவை அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவில் யுஜிசி தலைவர் பரிந்துரைத்த நபர் இல்லாதது விதிமீறல் என ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்போது துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர்.
இந்தக் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். இந்தச் சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ரவி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால், துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசியின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம். தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்துக்காகத் தேடுதல் குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவில், ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்ட நபர், தமிழ்நாடு அரசு பிரதிநிதி, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் மற்றும் யுஜிசி தலைவர் பிரதிநிதி ஆகியோர் இருந்தனர். குழுவின் தலைவராக ஆளுநரின் பிரதிநிதி இருப்பார். இதுகுறித்த அறிவிக்கையை ஆளுநர், அக்டோபர் 25ஆம் தேதி வெளியிட்டார்.
எனினும் யுஜிசி உறுப்பினரை ஏற்காத தமிழக அரசு, அவர் இல்லாமல், புதிய தேடுதல் குழுவை அமைத்தது. இதுகுறித்த அரசாணையை தமிழக அரசின் உயர் கல்வித்துறை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. எனினும் இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவைத் திரும்பப் பெற்று, பல்கலைக்கழக மானியத் தலைவர் பரிந்துரைத்த நபரைக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications