ஆளுநர் கொடுத்த அல்வா, வடை, காபி.. பதிலுக்கு விஜய்-க்கு கேட்ட ஒரு விஷயம்!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பல நாட்கள் நீடித்த அரசியல் பதற்றத்துக்கும், ஆட்சி அமைப்பு குறித்த குழப்பத்துக்கும் முடிவு கண்ட இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்துள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு பின்னால் நேற்று நடைபெற்ற அரசியல் நாடகம் மிகவும் பரபரப்பானதாக இருந்தது.

யூ-டர்ன் நாடகம்
விஜய் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் (விசிக) ஆதரவுக் கடிதத்தைப் பெற்ற பிறகு லோக் பவன் நோக்கிப் புறப்பட்டார். ஆனால் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் விஜயின் வாகனம் யூ-டர்ன் அடித்து திரும்பியது.
ஆளுநரின் கேரளா பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டு, மீண்டும் விஜயை அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து பனையூர் தவெக அலுவலகம் நோக்கிச் சென்ற விஜயின் வாகனம் மீண்டும் யூ-டர்ன் அடித்து லோக் பவன் நோக்கி விரைந்தது.
மூன்று முறை தோல்வி - 4வது சந்திப்பில் வெற்றி
முந்தைய மூன்று சந்திப்புகளிலும் விஜய் தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்கத் தவறியதால் ஆளுநர் அவருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் 4வது சந்திப்பில் 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் விஜய் நேரடியாக லோக் பவனுக்கு சென்றார். இந்த முறை ஆளுநர் ஆட்சி அமைக்க அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதத்தை வழங்கினார். இதைத் தொடர்ந்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
லோக் பவனில் ஆளுநர் விருந்தோம்பல்
விஜய் - ஆளுநர் மத்தியிலான 4வது சந்திப்பின்போது லோக் பவனுக்குள் மிகவும் அன்பான மற்றும் சுமூகமான சூழல் நிலவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், பதற்றமான சூழல் இல்லை.
இந்த முக்கிய சந்திப்பின் போது விஜய் மற்றும் கூட்டணித் தலைவர்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வடை, அல்வா மற்றும் காபி வழங்கினார். பல நாட்கள் நீடித்த அரசியல் பதற்றத்துக்கு மத்தியில் இந்த சந்திப்பு நட்புறவான முறையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ கடிதத்துக்காக காத்திருந்த விஜய்
சந்திப்பு முடிந்த உடனே வெளியேறாமல், ஆளுநரின் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்ள விஜய் சுமார் ஒரு மணி நேரம் லோக் பவனிலேயே இருந்தார். ஆட்சி அமைக்கும் அழைப்பை நேரடியாகப் பெற்ற பிறகே வெளியேற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ஆட்சியையும் பிடித்தார் விஜய், இன்றைய பதவியேற்பு விழாவில் ஆளுநர் மற்றும் விஜய், தவெக கட்சியினர் மத்தியிலான உரையாடலில் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் அனைவரும் சிரித்த முகத்துடனே உபசரித்தனர். ஆனால் விஜய் வாழ்நாளில் இந்த சனிக்கிழமை மிகவும் டென்ஷனான நாளாக இருந்திருக்க கூடும்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications