கோவி செழியன் திமுக சாதனை பற்றி போட்ட லிஸ்ட்.. உடனே ஆதவ் அர்ஜுனா கேட்ட டேட்டா டீடெயில்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்பேரவையில் கோவி செழியன் பேசியபோது, அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் மற்றும் திமுக அரசின் சமூக நலத் திட்டங்கள் குறித்துக் குறிப்பிட்ட விவாதம் எழுந்தது... உடனே அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயனடைந்தோரின் முறையான புள்ளிவிவரங்களை நாளை சமர்ப்பிப்பதாக கூறினார்.

சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

Govi Chezhian

அப்போது பேசிய திமுக உறுப்பினர் கோவி.செழியன், "ஏட்டளவில் மட்டும் செயல்படக்கூடிய இயக்கம் அல்ல திமுக. அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கிற இயக்கம் தான் திமுக.

குடிசையில் இருப்பவர்கள் கோபுரத்தை எட்டக்கூடிய வகையில் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, தாழ்த்தப்பட்டவர்களை விண்ணுயரச் செய்த இயக்கம் எங்ககளுடையது. இந்தியாவிலேயே முதன்முதலில் ஏழை எளிய மக்களுக்கு தீப்பிடித்து எரியாத கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டது முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தான்.

இந்தியாவின் முதல் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தைத் தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து மத்திய அமைச்சரான ஜெகஜீவன் ராம் அவர்களை அழைத்து வந்து திறப்பு விழா நடத்தப்பட்டது.. ,அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் ஒப்புதலோடு அந்தத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கோயிலுக்குள் நுழைய முடியாமல், தூரத்தில் நின்று கைகட்டி நின்ற ஆதிதிராவிடரைக் கோயில் அறங்காவலராக நியமித்தது திராவிட முன்னேற்ற கழக அரசுதான். '

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள் உலகத் தரம் வாய்ந்த புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று உயர்கல்வி (முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள்) பயில வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசால் உதவித்தொகை திட்டம் உருவாக்கப்பட்டது.. வெளிநாட்டு மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து படிப்பதற்கான திட்டம் அல்ல, மாறாக, தமிழக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கான அரசு திட்டமாகும்.

அ' முதல் 'ஃ' வரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வளர்ச்சியைக் கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தி.மு.க. ஆட்சியில் தான்" என்று கோவி.செழியன் பட்டியலிட்டார்.. அதுமட்டுமல்ல, சமூக பிரச்னையில் விதண்டாவாதம் பேசி மக்களிடையே அச்சத்தை உருவாக்க வேண்டாம் என்றம் தவெக அமைச்சர்களை கேட்டு கொண்டார்.

உடனே இந்த விவாதத்தின்போது ஆதவ் அர்ஜுனா எழுந்து, "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு அரசாணை (G/O.) பிறப்பிக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பதற்கான முறையான டேட்டாவை நாளைய தினத்தில் சமர்ப்பிக்கிறோம்.. அந்தத் திட்டம் எந்தெந்தக் கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது, எத்தனை பேர் அந்த வேலையில் இப்போது உள்ளார்கள்? என்பதற்கான தரவுகளைப் பதிவு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+