பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? அரசு பஸ்சில் டிக்கெட் புக்கிங் தொடக்கம்! முன்பதிவில் இனி புது ரூல்ஸ்
சென்னை: தொலை தூரங்களுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளில் தற்போது 60 நாட்களுக்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இனி 90 நாட்கள் வரையிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த வசதி இன்று (நவ.18) நண்பகல் 12 மணி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
தமிழகத்தில் தொலை தூர நகரங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் ரயில்களில் டிக்கெட் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. தட்கல் முன்பதிவிலும் கூட கண்ணை மூடி திறப்பதற்குள் டிக்கெட்டுகள் காலியாகி விடுகின்றன.

இதனால், பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டு வருகிறார்கள். தனியார் ஆம்னி பேருந்துகளில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விமான டிக்கெட்டிற்கு நிகரான கட்டணம் என சொல்லும் அளவுக்கு கட்டணம் அதிகப்படியாக வசூலிக்கப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் ஆம்னி பஸ்களில் செல்லவே ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டியதாக உள்ளது.
இதனால், அரசு விரைவு பேருந்துகளையே பயணிகள் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் நலன் கருதி கூடுதல் அரசு விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தற்போது வார நாட்களிலும் பயணிகள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக புக்கிங் செய்து செல்லும் பயணிகளுக்கு மாதம் தோறும் குலுக்கல் முறையில் பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நவம்பர் 20 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வரை அரசு பஸ்சில் முன்பதிவு செய்யப்படும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு அளிக்கப்படும் எனவும் முதல் பரிசாக பைக், இரண்டாவது பரிசாக எல்.இ.டி ஸ்மார்ட் டிவியும், மூன்றாவது பரிசாக ஃபிரிட்ஜும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு பிறகு குலுக்கல் நடைபெறும் எனவும் அதுபோக மாதாந்திர குலுக்கல் வழக்கம் போல நடைபெறும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மாதாந்திர குலுக்கலில் முதல் மூன்று பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற 10 வெற்றியாளர்களுக்க்கு தலா ரூ. 2ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைக்ளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது.
அந்த வகையில் இன்று முதல் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் இந்த வசதி அமலுக்கு வரும் என்றும் அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 60 நாட்கள் வரையில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications