1.5 கோடிக்கு கணவரை விலைக்கு வாங்கிய அரசு அதிகாரி.. மனைவியின் விசித்திர கண்டிஷன்! இரட்டை ரோஜா நிஜ கதை
சென்னை: நிஜ வாழ்க்கை சில சமயம் சினிமா பாணியிலேயே அமைந்துவிடும்.. அப்படித்தான் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ராம்கி, ஊர்வசி, குஷ்பு நடித்த இரட்டை ரோஜா படம் போலவே இந்த சம்பவம் அமைந்துள்ளது.. அதனால்தான், கடந்த 2 நாட்களாகவே இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியபடியே உள்ளது..
மத்திய அரசு துறையில் பணி புரியும் 42 வயது பெண் ஒருவருக்கும், 54 வயது நபர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது. இவர்களுக்கு இடையில் 12 வயது வித்தியாசம் இருந்தது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை.

மத்திய அரசு அதிகாரி
ஆனால், அதை விட முக்கியமான மேட்டர் என்னவென்றால், அந்த நபர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர். அவருக்கு 16 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் கூட இருக்கிறார்கள்.
தனது கணவர் தனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்து இருப்பதை மனைவி ஒருநாள் கண்டுபிடித்துவிட்டார்..
இந்த விவகாரத்தால் அந்த குடும்பத்தில் தினமும் சண்டை ஏற்பட ஆரம்பித்தது. கணவன் மனைவி இடையே நடந்த இந்த தொடர் மோதல்கள், வளர்ந்து வரும் குழந்தைகளின் மனநலத்தையும் அவர்களது கல்வியையும் பெரிய அளவில் பாதித்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மனைவி, இது குறித்து குடும்ப நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
1.5 கோடி விசித்திர கண்டிஷன்
உடனே கோர்ட்டும், இந்த தம்பதியினரை அழைத்து ஆலோசனை வழங்கியது. அப்போது அந்த கணவர், தன்னுடைய குழந்தைகள் மீது தான் உயிரையே வைத்திருப்பதாகவும், ஆனால், மனைவியுடன் சேர்ந்து வாழ துளிகூட இஷ்டம் இல்லை, இனி அந்த வீட்டிற்கு போக போவதில்லை என்றும் திட்டவட்டமாக சொன்னார்....
மேலும், விவாகரத்து பெற்று விட்டு தனது காதலியுடன் புதிய வாழ்க்கையை தொடங்க விரும்புவதாக அவர் உறுதியாக கூறினார். அவரது முடிவை மாற்ற ஆலோசகர்கள் முயன்றும், பிரயோஜனமில்லை..
இந்த சூழலில், தனது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க விரும்பிய மனைவி ஒரு நிபந்தனை விதித்தார்... அதாவது தன்னுடைய மகளின் நிதி பாதுகாப்பு மற்றும் தனது தேவைகளுக்காக ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து அல்லது ரொக்க பணம் கொடுத்தால் மட்டுமே விவாகரத்து செய்ய சம்மதிப்பதாக கோர்ட்டில் ஒரே போடு போட்டார்..
இரட்டை ரோஜா நிஜ சம்பவம்
உடனே கணவரின் காதலி இந்த நிபந்தனையை உடனடியாக ஏற்று கொண்டார். அவர் தனது பெயரில் இருந்த ஒரு பிளாட் மற்றும் சுமார் 27 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்து தனது காதலனை சொந்தமாக்கி கொண்டார். பணத்தையும் சொத்தையும் பெற்று கொண்ட அந்த மனைவி, தனது கணவரை விவாகரத்து செய்து காதலியுடன் வாழ வழி விட்டார்.
இப்படியாக, ஒரு விசித்திரமான உடன்படிக்கையின் மூலம் இந்த குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் போபால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
திருமண உறவில் பணமும் சொத்தும் குறுக்கிடும் போது உறவுகள் எப்படி மாறுகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்துள்ளது... அதனால்தான் இந்த செய்தி தொடர்ந்து இணையத்தில் வைரலாகி கொண்டும் உள்ளது..!!












Click it and Unblock the Notifications