எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுவில் உள்ள நடிகை கவுதமியும் எடப்பாடி பழனிச்சாமி மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம்.

"ராஜபாளையம் தொகுதி உனக்குத்தான், அதிமுக சார்பில் தேர்தல் வேலையை நீங்கள் ஆரம்பித்து விடுங்கள் " என்று கவுதமிக்கு வாக்குறுதி கொடுத்திருந்தாராம் எடப்பாடி. இதனால், அந்த தொகுதியில் கடந்த 4 மாதங்களாக கவனம் செலுத்தி வந்துள்ளார் கௌதமி. மேலும், இந்த வேலைகளுக்கு பல லட்சங்களையும் செலவு செய்திருக்கிறார்.

tamil nadu assembly elections 2026 aiadmk

இந்த சூழலில், ராஜபாளையம் தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்து விட்டு தன்னை ஏமாற்றி விட்டார் தலைவர். இதற்கு எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கக் கூடாது. தொகுதிகள் முடிவானதற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என சொல்லியிருந்தால் நான் பல லட்சங்களை செலவு செய்யாமல் இருந்திருப்பேன் என்று கதறாத குறையாக புலம்பி வருகிறார் நடிகை கௌதமி.

பல லட்சங்கள் போச்சே

இதைப்பற்றி பேசவும், வேறு ஒரு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் எடப்பாடியை பலமுறை கௌதமி தொடர்பு கொண்டும் அவரது ஃபோனை அட்டென்ட் பண்ணவில்லையாம் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் அவர் மீது ஏக வருத்தத்தில் இருக்கிறார் கௌதமி.

அதேபோல, தனது நண்பர் ஒருவருக்கு ராஜபாளையம் தொகுதியை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்திருந்தார் பாஜக நயினார். இது குறித்து எடப்பாடியை சந்தித்து, ராஜ பாளையத்தை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார் நயினார் நாகேந்திரன்.எடப்பாடியும் இதற்கு ஓகே சொல்லியிருந்துள்ளார்.

ஆனால், கடைசியில் நயினாருக்கும் பெப்பே காட்டிவிட்டார் எடப்பாடி. இதனால் நயினாரும் எடப்பாடி மீது செம கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் பாஜகவினர். எடப்பாடியின் 'அரசியல் ' செம ஹாட்டாகத்தான் இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் எது என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு

மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
-ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் என்னென்ன?

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:-

* தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதி

* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி

* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடி

* வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்

* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்

* திருச்சி மேற்கு

* சென்னையில் சைதாப்பேட்டை

* சென்னை பூந்தமல்லி

* திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் உள்ளிட்ட 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+