வள்ளியூர் ரோட்டுல லுங்கியுடன்.. அதைவிடுங்க.. கார் வாங்கின கையோடு ஜி.பி. முத்து எங்கே போனாரு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிபி முத்துவுக்கு அவரது ரசிகர்கள் திரண்டு வந்து வாழ்த்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம்?

டிக்டாக் என்றாலே ஜிபி முத்து என்று சொல்லுமளவுக்கு பிரபலமானார்.. ரொம்ப இயல்பாக எதார்த்தமாக இவர் பேசும் நெல்லை பாஷைக்கும் வார்த்தைக்கும் ரசிகர்கள் அதிகம்.

GP Muthu and the famous actor GP muthu has bought another new car

ஜிபி முத்து: "டிக்டாக் நண்பர்களே" என்று கூப்பிடும்போதே ரசிகர்கள் அந்த வார்த்தையில் விழுந்துவிடுவார்கள்.. இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர்.. இவரது வீட்டை ஒட்டியே ஒரு மரக்கடையை வைத்து நடத்தி வருபவர்.. இவரது பெரும்பாலான வீடியோக்கள் மரக்கடையில்தான் எடுத்திருப்பார்..

சுருக்கமாக சொல்ல போனால், மரக்கடை பிசினஸ் பார்ட் டைம்தான்.. இந்த டிக்டாக் தான் ஃபுல் டைம் வேலையாக இருக்கும். காலையில் பல் துலக்குவது முதல் இரவு தூங்க செல்லும் வரை இவருக்கு உலகமே டிக்டாக்தான். டிக்டாக் ஆப்பை தடை செய்துவிட்டதால், அப்போதிருந்தே சோகமாக இருந்தார்..

GP Muthu and the famous actor GP muthu has bought another new car

வீடியோ: பிறகு ஸ்டிரைட்டாக பிரதமர் மோடிக்கே கோரிக்கை விடுத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. "ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.. இந்த டிக்டாக்கை முதல்ல ஓபன் பண்ணுங்க.. எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு.. என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒன்னுமே சரியில்லை பார்த்துக்கிடுங்க" என்று அழுதுகொண்டே கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பிறகு வேறு வழியில்லாமல் சகஜநிலைமைக்கு திரும்பினார்.. அடிக்கடி வீடியோக்களை ஷேர்செய்தும் வருகிறார்.. சில டிவி ஷோக்களிலும் தலைகாட்டினார். ஜிபி முத்து பேசும் பேச்சுக்கு மட்டுமல்ல, அவர் ஆத்திரமும் ஆவேசத்துடன் திட்டி திட்டி பேசும் வார்த்தைகளுக்கும் ரசிகர்கள் அதிகம்.. ஜிபி முத்து கோபமாக பேசினால், அதை ரசிக்கும் மக்கள்தான் அதிகம்....

GP Muthu and the famous actor GP muthu has bought another new car

திருஷ்டி: அதாவது, வீடுகட்டும்போது திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது பெரும்பாலானோரின் வழக்கமாக உள்ள நிலையில், ஜிபி முத்துவின் பேனரையே, திருஷ்டிக்கு வைக்கும் அளவுக்கு பிரபலமானது, யாரும் எதிர்பார்க்காத ஒன்று..

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை கிராமத்தை சேர்ந்த கண்ணன், தான் கட்டி வரும் வீட்டுக்கு எந்த திருஷ்டியும் பட்டுவிக்கூடாது என்பதற்காக, ஜிபி முத்துவின் பேனரை வைத்து, "மூஞ்சியையும் முகரையும் பாரு" என்ற வாசகத்தை எழுதியிருந்தார். அந்த பேனரில், கையை டென்ஷனாக சுட்டிக்காட்டி, லுங்கியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார் ஜிபி முத்து..!

யூடியூப் சேனல்கள்: இதற்கு பிறகுதான், பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததுமே, புகழின் உச்சிக்கு சென்றார் ஜிபி முத்து. அதற்கு பிறகு, சினிமா பட வாய்ப்பு, டிவி ஷோக்கள் என உச்சிக்கு ஏறி கொண்டிருக்கிறார்.

கடந்த 2021ம் ஆண்டு, இவர் ஒரு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கியிருந்தார். தனது பரம்பரையிலேயே முதல் நபராக கார் வாங்கியது நான் தான் என்று பெருமையாக சொல்லி, வீடியோவும் பதிவிட்டிருந்தார். இப்போது, ஜிபி முத்து, இன்னொரு கார் வாங்கியிருக்கிறார்.. வெள்ளை நிறத்தில் Kia கார் வாங்குவதற்காக, தன்னுடைய குடும்பத்தையே கார் ஷோருமுக்கு அழைத்து சென்றுள்ளார்.

குலதெய்வம்: அதுமட்டுமல்ல, காரை வாங்கின கையோ? அப்படியே குலதெய்வ கோயிலுக்கும் சென்று முதல் பூஜையை போட்டுள்ளார்.. அடத்ததாக, குடும்பத்துடன், காரில் ஜிபி முத்து ஆட்டம் போட்டு, அதை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார். இந்த கார் எப்படியும் 15 லட்சம் விலை இருக்கும் என்கிறார்கள். தன் பரம்பரையிலேயே முதல் காரை வாங்கிய முத்துவுக்கு வாழ்த்துக்களை அவரது ரசிகர்கள் குவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+