பூமிக்கு அடியில் இரும்பு குழம்பு.. சைபீரியா பக்கமாக போகும் காந்த சக்தி.. திசைமாறும் திமிங்கிலங்கள்!
சென்னை: உங்க போன்ல இருக்கற மேப் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? நம்ம பூமிக்கு அடியில உள்ள உருகின இரும்பு குழம்பு சுத்திட்டே இருக்குறதாலதான். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக நினைத்துவிடாதீர்கள். மேற்கொண்டு படித்து பாருங்கள் நிறைய சுவாரசிய தகவல் இருக்கு.
இந்த இரும்பு குழம்பாலதான், பூமிக்கு காந்த சக்தி இருக்கு. அந்த காந்த சக்தியை வெச்சுதான் உங்க போன்ல இருக்கற காம்பஸ் வேலை செய்யுது. இந்த காந்த வடக்கு துருவம் ஒரே இடத்துல இருக்காதாம். அது நகர்ந்துக்கிட்டே இருக்கு. இப்போ அது சைபீரியா பக்கமா போயிட்டு இருக்காம்.

சும்மா வடக்குன்னு சொல்றோம் இல்லையா, அது வேற. இந்த காந்த வடக்கு துருவம் வேற. இது ஒரு இடத்துல நிக்காம ஊர் சுத்துற மாதிரி. 1831ல ஒருத்தர் கண்டுபிடிச்சதுல இருந்து இது ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல போயிருச்சாம். கனடால இருந்து ரஷ்யா வரைக்கும் போயிருக்கு. கொஞ்ச நாளா இது ரொம்ப வேகமா போயிட்டு இருக்காம். வருஷத்துக்கு 35 கிலோமீட்டர் வேகத்துல போகுதாம்!
சிம்பிளா சொல்றோம் படிங்க
இது ரொம்ப கஷ்டமா இருக்கா? சிம்பிளா சொல்லணும்னா, பூமிக்குள்ள இருக்கற உருகின இரும்பு குழம்பு ஒரு பெரிய சூப் மாதிரி கொதிச்சுக்கிட்டே இருக்குன்னு நினைச்சுக்கோங்க. அது கொதிக்கிறப்ப கண்ணுக்கு தெரியாத காந்த கோடுகள் பூமியை சுத்தி உருவாகுது. இந்த கோடுகள்தான் பறவை, திமிங்கலம்ல இருந்து கப்பல், ஏரோபிளேன், ஏன் உங்க ஊபர் டிரைவர் வரைக்கும் வடக்கு எதுன்னு கண்டுபிடிக்க உதவுது.
விமானங்கள் தடுமாறும்
அதனால நம்ம மேப் எல்லாம் இந்த காந்த சக்திக்கு ஏத்த மாதிரி அப்டேட் பண்ணலைன்னா எல்லாம் தப்பா போயிடும். கொஞ்ச டிகிரி தப்பினாலும் ஏரோபிளேன் துபாய்க்கு பதிலா டெல்லில இறங்க நினைக்கும். கப்பல் தப்பா போர்ட்ல போய் நிக்கும். உங்க டெலிவரி பையன் கூட தப்பான வழியில போயிடலாம். அதனாலதான் சயின்டிஸ்ட்ங்க "உலக காந்த மாதிரி"ன்னு ஒன்னு ரெடி பண்ணி அடிக்கடி அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்காங்க. இது உங்க போன்ல கூகுள் மேப் அப்டேட் பண்ற மாதிரிதான். ஆனா இது பூமி முழுக்க உள்ளது. அதனாலதான் இது கொஞ்சம் கஷ்டமான வேலை. நிறைய காசு, டைம், டேட்டா எல்லாம் தேவைப்படும்.
தலைகீழா மாறிய காந்த சக்தி
போன வருஷம் டிசம்பர்ல ஒரு புது அப்டேட் விட்டாங்க. அது 2029 வரைக்கும் வேலை செய்யும். இப்போ வந்த அப்டேட் ரொம்ப துல்லியமா இருக்குமாம். ஏரோபிளேன், ராணுவம், கப்பல் துறையில இது ரொம்ப முக்கியம். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா கம்பெனிக்காரங்களும் இதை அவங்க சிஸ்டம்ல மாத்தணும்.
ஆனா இதுல ஒரு விசித்திரமான விஷயம் இருக்கு. முன்னாடி பூமியோட காந்த சக்தி தலைகீழா மாறி இருக்காம். வடக்கு தெற்காகவும், தெற்கு வடக்காகவும் மாறி இருக்கு. கடைசியா அப்படி நடந்தது 7 லட்சத்து 80 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியாம். அப்போ பூமி நல்லாதான் இருந்துச்சு. ஆனா அப்போ மனுஷங்க இல்ல. இருந்திருந்தா செயற்கைக்கோள், போன் நெட்வொர்க், கடல்ல இருக்கற திமிங்கலங்கள் மாதிரி உயிரினங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிருக்கும்.
அப்டேட் பண்ணனும்
இப்போ உடனே அப்படி மாறும்னு சொல்ல முடியாது. ஆனா நகர்வு நடந்துகிட்டே இருக்கு. AI வெச்சு சரியா பண்றதுக்கும், தானா சரியாக்கும் காந்தமானி எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா இப்போதைக்கு இருக்கற நல்ல வழி இந்த உலக காந்த மாதிரியை அடிக்கடி அப்டேட் பண்றதுதான். இதத்தான் உலகத்துல இருக்கற ஜிபிஎஸ், டெக் கம்பெனிக்காரங்க எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. ஏன்னா எவ்வளவு நாள் வெயிட் பண்றோமோ அவ்வளவு திசை காட்டும் பிழை அதிகமாகும்.
அடுத்த தடவை உங்க டாக்ஸி டிரைவர் உங்களை கரெக்டா எங்கயாவது கொண்டு சேர்த்தாலோ இல்ல ஏரோபிளேன் மேகமூட்டத்துல கரெக்டா இறங்கினாலோ, அது வெறும் டெக்னாலஜி மட்டும் இல்ல. பூமிக்கு அடியில இருக்கற உருகின இரும்பு மேஜிக் பண்ணுதுன்னு நினைச்சுக்கோங்க.
காதலும் கடவுளும் மட்டும்தான் கண்ணுக்கு தெரியாதுன்னு சொல்லுவாங்க. கண்ணுக்கு தெரியலைன்னாலும் காந்த சக்தியும் கடவுள்தான் போலல்ல. இல்லைன்னா நாமல்லாம் எவ்ளோ தடுமாறிப் போய்டுவோம். நன்றி ஹே!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications