Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராமுக்கு ஏறிய தங்கம் விலை! ரேசனில் பயனாளிகளுக்கு தங்கம், வெள்ளி வழங்கப்படுமா? அரசு சர்ப்ரைஸ் தருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் உறுதியளித்துள்ளார்.. இந்நிலையில், ரேஷனில் தங்கம், வெள்ளி வழங்க வேண்டும் என்ற புது கோரிக்கை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.. இது பொதுமக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது. இதன் விவரம் என்னவென்று சுருக்கமாக பார்ப்போம்.

தென்னை விவசாயிகளை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஆரோக்கியமான உணவுப்பொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

Gram gold rate Jewellery Ration Shops

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், 'சிதறு தேங்காய் உடைக்கும்' போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ரேஷனில் தேங்காய் எண்ணெய்

சந்தையில் தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக, தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் எனவும் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளதாக, தென்னை விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உறுதி விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்..

ரேஷன் கடைகளில் தங்கம், வெள்ளி

இப்படிப்பட்ட சூழலில், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சிறிய வகை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக மானிய விலையில் விற்பதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச்சங்க தலைவர் லிங்கபெருமாள் அளித்துள்ள அந்த மனுவில் உள்ளதாவது:

"தமிழகத்தில் சமீப நாட்களில், தங்க நகை ஒரு சவரன், ஒரு லட்சம் ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏழை மக்கள், குறிப்பாக பெண்கள், தங்க நகைகளை, திருமணம், காதுகுத்து மற்றும் சுப காரியங்களுக்கு வாங்கி பயன்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.

தங்க நகைகள், வெள்ளி நகை

கல்லுாரி செல்லும் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவியர், சிறிய அளவில், தங்க சங்கிலி கூட அணிந்து செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, வேதனையில் உள்ளனர்.

எனவே, ஏழை குடும்பத்தை சேர்ந்த கல்லுாரி மாணவியருக்கு, மானிய விலையிலும், குறைந்த விலையிலும், கழுத்து சங்கிலி மற்றும் காதணிகள் உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் ரேஷன் கடைகள் வாயிலாக விற்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரேஷன் கடையில் தங்கம், வெள்ளி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, பலரது கவனத்தை பெற்று வருகிறது. இது நடைமுறையில் சாத்தியமா? என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

ரேஷனில் தங்கம் தருவார்களா?

அரிசி, சர்க்கரை போல் ரேஷன் முறையில் நேரடியாக தங்கம் வழங்குவது அரசின் வழக்கமான திட்டங்களில் இல்லை. மேலும் தங்கத்தின் விலை தினமும் மாறிக்கொண்டே இருப்பதால், மானிய விலையில் விற்பனை செய்வது அரசுக்கு பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும்.

எனினும், இந்த கோரிக்கை உணர்வுப்பூர்வமாக நியாயமானது. ஆனால் ரேஷன் கடைகளில் நேரடியாக தங்க நகைகள் விற்பனை செய்வது சாத்தியமில்லை என்பதால், அதற்கு பதிலாக, கூட்டுறவு வங்கிகள் வழியாக குறைந்த எடையிலான நகைகள் மற்றும் தவணை அடிப்படையிலான திட்டமாக கொண்டு வந்தால், அரசு பரிசீலிக்கக்கூடிய ஒரு யோசனையாக இது மாறும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் தங்கம், வெள்ளி

இதனால் நடுத்தர, ஏழை மக்களின் வீடுகளில் திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்வுகளுக்காக தனியார் நகைக் கடைகளில் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைமை குறையும். அரசு அல்லது கூட்டுறவு அமைப்புகள் மூலமாக நகைகள் வழங்கப்பட்டால், அதன் தரம், எடை, தூய்மை குறித்து நம்பிக்கையும் அதிகமாகும்..

மொத்தத்தில், தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச்சங்க தலைவர் லிங்கபெருமாள் அரசுக்கு அளித்துள்ள இந்த கோரிக்கையானது, பெரும் கவனம் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+