கிராம நத்தம் பட்டா.. பத்திரப்பதிவு தாமதம்.. வழிகாட்டி மதிப்பு குளறுபடி.. எதையுமே விடல பெயிரா.. ஏன்?
சென்னை: கிராம நத்தம் பட்டா வகைப்பாடு சம்மந்தமான தகவல்கள் குறித்து பொதுமக்களுக்கு நிறைய சந்தேகமும், அச்சமும் உள்ளதால், அரசு தரப்பில் இதற்கு சரியான விளக்கத்தை வழங்கிட வேண்டும் என்று பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தஞ்சை மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மாநில நிர்வாகச் செயலாளர் S.பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

தேசிய துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், மற்றும் சம்பத், மாறன், பிரியாகாந்தன், முருகப்பன், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்கூட்டத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை குறித்த பல்வேறு விவகாரங்கள் அலசப்பட்டன..
வேலைவாய்ப்பு: இறுதியில், தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், என அந்தந்த மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் உதவும்வகையில், அனைத்துவிதமான திட்டங்களையும் அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அத்துடன், மேற்கண்ட மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தீர்மானங்களும் பல நிறைவேற்றப்பட்டன..
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNRERA) திட்டங்களை பதிவு செய்து உத்தரவு பெற தற்போது அதிக காலதாமதம் ஆவதால், இனி புதிய வீட்டுமனை பிரிவு திட்டங்களை பதிவு செய்து உத்தரவு பெறுவதற்கு 7 தினங்கள் எனவும், கட்டிட திட்டங்களை பதிவு செய்து உத்தரவு பெறுவதற்கு 15 தினங்கள் எனவும் கால அவகாசம் நிர்ணயம் செய்து விரைவாக பதிவு செய்து உத்தரவு வழங்கும் வகையில் வழிவகை செய்ய இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு பதிவுத்துறை குறித்து நிறைவேற்றப்பட்டுள்ளன தீர்மானங்கள் பின்வருமாறு:
பதிவுத்துறையின் இணையதளமான tnreginet.net அடிக்கடி செயல் இழந்து விடுகிறது. ஆகவே பதிவு பணியை மேற்கொள்ள வருகை தரும் பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை பதிவுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாமல், அதனால் பதிவு பணியும் பாதிக்கப்படுகிறது.
பதிவுத்துறை: பதிவுத்துறையின் இணையதளம் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கொடுக்கும் பதிவுத் துறையின் இணையதளத்தையும் மென்பொருளையும் வலிமைப்படுத்தி நவீனப்படுத்திட வேண்டுகிறோம்.
அதே போன்று பதிவுத்துறையின் இணையதளத்தில் தவறுதலாக உள்ளீடு செய்யும் தகவல்களை திருத்தம் செய்வதற்கு (Index Correction) மாதக்கணக்கில் காலதாமாகிறது. அதனை ஓரிரு நாட்களில் சரி செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
முரண்பாடுகள்: புதிய மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்யும் இனங்களில் அங்கு நிலவும் சந்தை மதிப்பை விட பல அலுவலகங்களில் அதிகமாக மதிப்பு நிர்ணயம் முரண்பாடாக செய்யப்படுகிறது.
புதிய மனைப்பிரிவின் அருகில் பதிவான உயர் மதிப்பு 5 ஆவணங்கள் பதிவாகியிருந்தால் அதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்ற பதிவுத்துறை தலைவரின் உத்தரவு இருந்தாலும், மாவட்டப் பதிவாளர்கள் ஒரே ஒரு ஆவணம் கூட வங்கியில் கடன் பெறும் நோக்கத்தில் உயர் மதிப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு உயர் மதிப்பை நிர்ணயித்து வருகிறார்கள்.
இதனால் மனைகள் விற்பனை செய்ய முடியாமல் ரியல் எஸ்டேட் வணிகம் முடங்கும் சூழ்நிலையில் உள்ளது. இதற்கு தகுந்த சரியான வழிகாட்டுதல்களை பதிவுத்துறை தலைவர் வழங்கிட வேண்டுகிறோம்.
சார் பதிவாளர் அலுவலகம்: சார் பதிவகங்களில் தணிக்கை செய்யும் தணிக்கை மாவட்ட பதிவு அலுவலர்கள் பதிவுத்துறை விதிகள் மற்றும் பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கைக்கு முரணாக வருவாய் இழப்பு என்று தணிக்கை குறிப்புரைகளை எழுதி உடன் கட்சிக்காரர்களுக்கு அதுகுறித்து உரிய அறிவிப்பு அனுப்பி உரிய விளக்கம் கேட்காமலேயே அவர்களின் சொத்துக்களின் அட்டவணையில் வில்லங்கச் சான்றுகளில் அரசுக்கு கடன் நிலுவை என குறிப்புரை செய்து விடுகிறார்கள்.
இதனால் சிவில் சட்டங்களை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கின்றனர். சிவில் நீதிமன்றத்தை தவிர சொத்தினை இணைப்பு (அட்டாச்மென்ட்) செய்வதற்கு எந்த துறைக்கும் எந்த அலுவலருக்கும் அதிகாரமில்லை.
மிரட்டல்கள்: ஆகவே தேவையில்லாத தணிக்கை குறிப்புரையை கொண்டு நியாயமில்லாத தொகையை செலுத்த பதிவுத்துறை பொதுமக்களுக்கு மிரட்டல் செய்வது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை. ஆகவே பதிவுத்துறை தலைவர் இதனை கூடுதல் கவனத்தில் கொண்டு, அப்பாவி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட பிரச்சினைகளுக்கு சரியான மற்றும் தகுந்த தீர்வினை காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு சட்டத்தில் கண்ட காரணங்கள் பதிவு சட்ட பிரிவு 35 (1) இவை அல்லாமல் வேறு எந்த காரணத்திற்காகவும் ஆவணங்களை பதிவு செய்ய மறுக்கக் கூடாது என பல முறை உத்தரவுகள் போடப்பட்டிருந்த போதிலும், தொடர்ந்து பதிவுத்துறை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக அசல் ஆவணம் தாக்கல் செய்யப்படவில்லை
வழிகாட்டி மதிப்பு: வழிகாட்டி மதிப்பில் குளறுபடிகள் மற்றும் முரண்பாடுகள் உள்ள சொத்துக்களை இந்திய முத்திரைச் சட்டப்பிரிவு 47ஏ1ன் கீழ் பதிவு அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனநாயகப்படி உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மேற்கண்ட சட்ட பிரிவில் எந்தவிதமான சட்ட திருத்தமும் கொண்டு வராமல், பதிவுத்துறை அமைச்சர் மற்றும் பதிவுத்துறை தலைவரின் வாய்மொழி உத்தரவு என்று சொல்லி, வழிகாட்டி மதிப்பு குளறுபடியை காரணம் காட்டி சரிபார்ப்பு பட்டியல் (Check slip) போட்டு ஆவணத்தை பதிவுக்கு ஏற்க மறுத்து திருப்பி ஒப்படைக்கின்றனர்.
ஹைகோர்ட்: இதனால் பொதுமக்கள் அரசை வசைபாடுவதோடு, ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற வேண்டியதாக உள்ளது. இதற்கு பதிவுத்துறை தலைவர் தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
பதிவு பணியை மேற்கொள்ள பதிவு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் வரி செலுத்தக் கூடியவர்கள். ஆனால் பதிவு அலுவலகங்களில் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாமல் கிரிமினல் குற்றவாளிகள் போல் நடத்தப்படுகின்றனர். பதிவு அலுவலகம் வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்திடவும், பொதுமக்கள் அமர்ந்து கொள்ளவும், கழிவறை வசதிகளை புதுப்பித்துக் கொடுக்கவும் பதிவுத்துறை தலைவர் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
சார் பதிவாளர்: பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண். 21090/C1/2022, தேதி. 29/06/2022. வெவ்வேறு சார்பதிவாளர் அலுவலக அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரே நபருக்கு சொந்தமான ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துக்களை கொண்ட ஒரு ஆவணத்தினை ஒரு குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திடும் போது, அதிக காலதாமதம் ஏற்படுத்தாமல் ஒரு வார காலத்துக்குள் பதிவு செய்த ஆவணத்தை திரும்ப ஒப்படைக்கும் வகையில் வழி வகை செய்ய வேண்டுகிறோம்.
வயோதிகம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டு பதிவு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து பதிவு பணியை நடைமுறைப்படுத்த இயலாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கு சென்று பதிவு செய்யும் தனியார் வருகை (Private Attendance) நடைமுறையை உறுதி செய்ய வேண்டுகிறோம்.
முத்திரை தீர்வு: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ளது போல அசையா சொத்துக்கள் பதிவுக்கு முத்திரைத் தீர்வை 5% சதவீதமும், பதிவு கட்டணம் சேவை செய்வதற்காக குறைந்தபட்சம் ஒரு சதவிகிதமும் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் எனவும் நிர்ணயித்து நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.
கிராம நத்தம் பட்டா வகைப்பாடு சம்மந்தமான தகவல்கள் தற்பொழுது இணையதளத்தில் ரயத்துவாரி மற்றும் சர்கார் என இரு வகையில் மட்டும் பதிவேற்றம் செய்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இது குறித்த சரியான விளக்கத்தை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமென வேண்டுகோள் வைக்கின்றோம்.
மறுக்கிரையம்: அதேபோல, தமிழகம் முழுவதும் கடந்த 20.10.2026 க்கு பிறகு அங்கீகாரம் இல்லாமல் மனைகளாகவும், ஐந்து சென்ட் பத்து சென்ட் நிலமாகவும் நேற்று வரை பதிவு செய்த ஆவணங்களை மறுக்கிரையம் செய்ய இயலவில்லை, இதற்கு தீர்வு காணும் வகையில் குறைந்தபட்ச அபராதத்துடன் கூடிய சிறப்பு திட்டத்தைக் கொண்டு வந்து மீண்டும் பதிவு செய்யும் வகையிலும், அங்கீகாரம் பெறும் வகையிலும் அரசு வழிவகை செய்யவும் பெயிரா கோரிக்கை விடுத்திருப்பது, பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications