கிராம நத்தம் நிலங்கள்.. தானியங்கி பட்டா மாற்றம்.. தண்டத்தொகை.. தமிழக அரசுக்கு பெயிரா மேஜர் கோரிக்கை
சென்னை: ஆன்லைனில் இலவசமாக பொதுமக்கள் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்க வேண்டும் என்றும், கிராம நத்தம் நிலங்கள் சம்பந்தமான பதிவேற்றத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்து, தானியங்கி பட்டா மாற்றத்தில் உள்ள பிரச்சனைகளையும் களைய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கை விடுத்திருக்கிறது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா (மைய - மாநில அரசுக்கு நன்றி பாராட்டு விழா, 2025 ஆம் ஆண்டு பொதுக்குழு மற்றும் காலண்டர் - டைரி வெளியிட்டு சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கும் விழா) திருவண்ணாமலையில் நடைபெற்றது.

முப்பெரும் விழா: இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர், எ.வ.கம்பன், பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மேயர் நிர்மலா கார்த்திக் வேல்மாறன், சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம். ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி இம்மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.. இம்மாநாட்டில், தமிழக மக்களின் நன்மைகளை மட்டுமே கருத்தில்கொண்டு, பல்வேறு திட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பட்டா மனைகள்: குறிப்பாக, கடந்த 2016ம் ஆண்டு வரை அனுமதியற்ற முறையில் பதிவு செய்துள்ள பட்டா மனைகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாக தீர்வு, கிராம நத்தம் மனைகளுக்கு அனுமதி பெறுவதில் சலுகை, கட்டிட திட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் இனங்களில் முந்தைய ஆவணங்கள் கேட்பதில் இருந்து விலக்கு, புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு அணுகு சாலையில் சலுகை, ஒற்றைச்சாளர முறையில் கட்டடம், மனைப்பிரிவு, உட்பிரிவு உள்ளிட்ட அனுமதிகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு, இந்த மாநாட்டில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், பதிவுத்துறையில் உதவி மையம், சேவை மையம் போலி ஆவண தடுப்பு நடவடிக்கைகள், மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் திட்டம், புதிய மண்டல, மாவட்ட, பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட திட்டங்களையும், வருவாய்த்துறையில் எங்கிருந்தும் எந்நேரத்திலும் தானியங்கி பட்டா மாற்றம் திட்டம் எட்டாம் திட்டம் நில அளவைக்கு விண்ணப்பிக்கும் திட்டம், வீட்டுமனை பிரிவுக்கு மொத்தமாக பட்டா மாறுதல் திட்டம், கிராம நத்தம் மனைகளை இணையதளத்தில் பதிவேற்றும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்: அதேபோல, பொதுமக்களின் நன்மைகளையும், வசதிகளையும் கருத்தில் கொண்டு, பல்வேறு தீர்மானங்கள் பெயிராவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஒருசில முக்கிய தீர்மானங்கள் இவைகள்தான்:
- மைய அரசுக்கு மலிவு விலை கட்டிட திட்டங்களுக்கு வருமான வரியில் விலக்கு வேண்டும், கட்டுமான பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை தங்கத்துக்கு நிகராக குறைக்க வேண்டும், வருமானத்தின் மீதான வரிப்பிடித்தத்தின் வரம்பை உயர்த்த வேண்டும், முதல் மற்றும் இரண்டாம் வீடுகளை வங்கியில் கடன் பெற்று வாங்குபவர்களுக்கு வருமான வரியில் சலுகை வேண்டும், அதன் வரம்பை உயர்த்த வேண்டும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வீடு கட்டும் அனைவருக்கும் முன்கூட்டியே மானியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில், ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியும், உடனடி அனுமதி பெறும் திட்டத்தில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் நான்கு வீடுகள் மற்றும் 9 மீட்டர் உயரம் என மாற்றம் செய்ய வேண்டும், மலைப்பகுதிகளுக்கென தனியாக விதிகளை உருவாக்க வேண்டும் எனவும், ஐந்து மாடி உயரம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதில் ஆந்திராவைப் போன்று சலுகை வேண்டும்
- கட்டடங்கள், மனைப்பிரிவு, உட்பிரிவு போன்றவற்றிற்கு அனுமதி வழங்கும் அதிகார வரம்பை உயர்த்தி துணைக் குழுக்களான உள்ளாட்சிகளுக்கு வழங்கிட வேண்டியும், அதேபோன்று உள்ளாட்சியிடம் இறுதி ஒப்புதல் பெறுவதற்கு இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்
- பதிவுத்துறையில் மக்களுக்கு உதவாத பல்வேறு சட்டப்பிரிவுகளை மாற்றம் செய்ய வேண்டியும், பல்வேறு திட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும், நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், புதிய வீட்டுமனை பிரிவில் மின்சார வாரியத்திற்கு தானமாக ஒப்படைக்கும் ஒதுக்கீடு நிலத்திற்கு முத்திரைத் தீர்வை விலக்குக் கோரியும், முதங்கு தடையற்ற மின்சாரமும், மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பும் மற்றும் அதிநவீன இணையதள இணைப்பும் தேவை
- மனைப் பிரிவிற்கு ஏழு நாட்களுக்குள்ளும் கட்டடங்களுக்கு 15 நாட்களுக்குள்ளும் காலதாமதம் இன்றி பதிவு செய்து உத்தரவு வழங்க வேண்டும் எனவும், ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்து ஒப்புகை சீட்டுப்பெற்று அதன் அடிப்படையில், பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் திட்டங்களுக்கு விதிக்கப்படும் முறையற்ற தண்டத் தொகையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல, வருவாய்த் துறையில் இணையதளம் வாயிலாகவே இலவசமாக பொதுமக்கள் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட ஏற்பட்டுள்ள சிரமங்களை தவிர்க்கவும், வீட்டுமனை பிரிவில் மொத்தமாக உட்பிரிவு செய்யும் திட்டத்தில் உள்ள காலதாமதம் உள்ளிட்ட சிக்கல்களை களையவும், இணையதளத்தில் கிராம நத்தம் நிலங்கள் சம்பந்தமான பதிவேற்றத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யவும், தானியங்கி பட்டா மாற்றத்தில் உள்ள பிரச்சனைகள் சிக்கல்களை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
சிறப்பித்தனர்: இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் ஜமாலுதீன், கமல் சந்த், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசியக் குழு பொறுப்பாளர்கள், மாநிலக் குழு பொறுப்பாளர்கள், கூட்டமைப்பின் மேலாளர், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications