12,480 ஊராட்சிகளில் நடந்த கிராம சபைக் கூட்டம்.. காணொளி காட்சி வாயிலாக பங்கேற்ற ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிராம மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வதற்காக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஆண்டுக்கு 6 கூட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அதேபோல் சிறப்புக் கூட்டங்களும் நடத்தப்படும். இந்த நிலையில் இன்று நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலமாக கலந்து கொண்டு பேசி வருகிறார்.

10 ஆயிரம் ஊராட்சிகளில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் பேசிய பின், கிராம சபைகளில் 16 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல் கிராம சபைக் கூட்டத்தில் உடனடியாக செய்யப்பட வேண்டிய 3 அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. நம்ம ஊரு, நம்ம அரசு என்ற திட்டத்தின்படி ஊராட்சிகளில் அதற்கான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சாதிப் பெயர்களை குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் ஆகிய பொதுப்பகுதிகளுக்கு வைத்திருந்தால், அதனை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது. இதனை அரசு தனிச்சையாக செய்யாமல், மக்களின் விருப்பப்படி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் கிராம சபைகளில் இதுகுறித்து ஆலோசித்து மக்கள் முடிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மழை நீர் சேகரிப்பு, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நிலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் கிராம சபைகளில் விவாதிக்கப்பட உள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட கோவளம் ஊராட்சி, தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் ஊராட்சி, கோவை மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சி, விழுப்புரம் மாவட்ட கொண்டாங்கி ஊராட்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் ஊராட்சி ஆகியவற்றில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications