வேல்முருகன் சிஎம் ஆபீஸ் பற்றி சொல்றதை பாருங்க.. ரூ.1200 கோடி? கிருஷ்ணசாமி, பிரேமலதா வேற லெவல் ஐடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.. தற்போதைய இடநெருக்கடி மற்றும் எதிர்கால நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டு 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த புதிய வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புக்கு பல்வேறு விமர்சனங்கள், யோசனைகள் குவிந்து வருகின்றன.

புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை அமைக்கும் அறிவிப்பு வெளியான நிலையில், இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் திட்டத்தின் செலவு மற்றும் தேவையை கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இன்னும் சிலர், இந்த பிளான் செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆலோசனைகளை முன்வைத்து வருகிறார்கள்..

CM Office CM Office Project New Secretariat Plan

ரூ.1200 கோடி தேவையா?

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ரூ.1200 கோடி செலவு செய்வது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் புதிய சட்டப்பேரவை கட்டப்பட்டு, பிறகு அது மருத்துவமனையாக மாற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், ஆட்சி மாறும்போது புதிய தலைமைச் செயலகத்தையும் பயன்படுத்தாமல் போகும் நிலை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தின் தலைநகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருப்பதால், இத்தகைய சூழலில் ரூ.1,200 கோடியை செலவு செய்வது அவசியம்தானா என்றும் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரேமலதா தந்த ஐடியா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை வரவேற்றுள்ளார். ஆனால் அதேசமயம், ஆட்சி மாறினாலும் இந்த கட்டிடத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாத வகையில் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு ஆட்சி கட்டிய தலைமைச் செயலகத்தை அடுத்த ஆட்சி வேறு பயன்பாட்டுக்கு மாற்றிய நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதே பிரேமலதாவின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமல்ல, புதிய கட்டிடம் தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் புதிய தலைமைச் செயலக அறிவிப்பை வரவேற்றுள்ளார். ஆனால், இது வெறும் அலுவலகங்கள் செயல்படும் நவீன கட்டிடமாக மட்டும் இருக்கக்கூடாது என்கிறார்.. அதாவது தமிழர்களின் தொன்மை, பண்பாடு மற்றும் கட்டிடக்கலை மரபை உலகிற்கு எடுத்துக்காட்டும் முக்கியமான அடையாளமாக புதிய தலைமைச் செயலகம் இருக்க வேண்டும் என்பதே வேல்முருகனின் எதிர்பார்ப்பு.

தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் சிற்பக்கலை, செட்டிநாடு கட்டிடக்கலை போன்ற தமிழகத்தின் பாரம்பரிய அம்சங்களை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து கட்டிடம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.

நுழைவாயில் முதல் சட்டப்பேரவை அரங்கம் வரை தமிழகத்தின் வரலாறு மற்றும் கலைப்பண்பாடு தெரியும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்றும், கட்டிட வடிவமைப்பை இறுதி செய்வதற்கு முன்பு கட்டிடக் கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் ஆலோசனையை பெற வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அப்படியானால் அரசு முடிவு?

புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக வெளியாகும் இந்த கருத்துகளை பார்க்கும்போது, விவாதம் கட்டிடம் கட்டுவதா, வேண்டாமா என்பதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ரூ.1200 கோடி செலவு என்பதால் அந்த பணம் முழுமையாக பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

ஆட்சி மாறினாலும் திட்டம் தொடர வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பு, எதிர்காலத்தில் கட்டிடத்தை எப்படி பயன்படுத்துவது, அதேசமயம் தமிழகத்தின் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டிடத்தில் பிரதிபலிப்பது என பல விஷயங்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் உருவாகும் ஒரு பெரிய திட்டம் என்பதால், செலவு முதல் கட்டிட வடிவமைப்பு வரை அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது இந்தத் திட்டத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+