போக்குவரத்து + ஆதிராவிடர் நலத்துறை.. தமிழக சட்டசபையில் இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையின் 5வது நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் போக்குவரத்து துறை, பிற்படுத்தபட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்பட பல்வேறு துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று புதிதாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் என்பது ஆளுநர் உரையுடன் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 19ம் தேதி பொது பட்ஜெட்டும், 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

tamil nadu assembly tamil nadu chennai

இதையடுத்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக கடந்த 20ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் சட்டசபையின் 5வது நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

தற்போது ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட துறைகள் வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இன்றும் பல்வேறு துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்றைய 5வது நாள் சட்டசபை கூட்டத்தில் காலையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டங்கள் (பொதுப்பணித்துறை), சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனம் (சுற்றுச்சூல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

அதன்பிறகு மாலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர், கிராம தொழில்கள் துறை, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிருவாகம் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), போக்குவரத்து துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+